தமிழ் குரல் / AI Voice
பார்லிமெண்ட் எலெக்ஷனுக்கு இன்னும் ஜஸ்ட் ஒன் இயருக்கும் குறைவான காலமே இருக்கும் சூழலில், நாட்டில் உள்ள அம்புட்டு அரசியல் கட்சிகளும் தேர்தலை எதிர் கொள்ள இப்பவே தயாராகி வருது. குறிப்பா, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பெரிய தேசிய கட்சிகள் மட்டும் இல்லாமல் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள முக்கிய கட்சிகளும் தீவிரமாக செயல்படத் தொடங்கி இருக்குது.

இதில் லாஸ்ட் நைன் இயர்ஸ் ரூலீங் கவர்மெண்ட் & பாஜக வலிமையான கட்சி என்பதால் இதில் எதிர்க்கட்சிகள் சற்று முன்னதாகவே ‘Opposition Unity’-ஐ கட்டமைப்பதற்காக பெரிய முயற்சியெடுத்து இரண்டாவது கட்ட ஆலோசனையை தொடங்கி முடிச்சிருக்காய்ங்க. அதுவும் எதிர்க்கட்சிகள் ‘INDIA’ (Indian National Democratic Inclusive Alliance) என்று தங்களது கூட்டணி கட்சிக்கு பெயரும் வைத்துள்ளனர். இந்த நேரத்தில், பாரதிய ஜனதா கட்சி தன்னுடைய கூட்டணி கட்சிகளை ஒன்றிணைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தது. இதற்காக சுமார் 20 ஆண்டுகளாக இருக்கும் அதே NDA என்கிற தேசிய ஜனநாயக கூட்டணி பெயரிலேயே எல்லா கூட்டணி கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துருந்துச்சு.
இந்த தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு பெரிய கூட்டணியாக வைத்தால் கூட, எதிர்க்கட்சிகள் போல வலுவான கூட்டணி இருக்கிறதா என்பது அரசியல் களத்தில் ஒரு பெரிய கேள்விக்குறியாக பார்க்கப்படுது. ஏன்னா, தேசிய ஜனநாயக கூட்டணி- என்டிஏ என்றாலே பாரதிய ஜனதா கட்சி மட்டுந்தான் அப்படீன்னு நாம் உள்வாங்க வேண்டியுள்ளது. NDA-வில் இருக்கும் பெரிய கட்சி என்றாலே பாஜக மட்டுமாதான் கீது; ஏனைய கட்சிகள் அனைத்துமே சிறிய சிறிய கட்சிகள். தமிழ்நாட்டை பொறுத்தவரை 5 கட்சிகள் ஆலோசனையில் பங்கேற்றுச்சு. அதில், அதிமுக என்பது மட்டும்தான் கொஞ்சம் வலிமையான கட்சி. பாமகவும் தனி இடத்தை தக்க வைத்த கட்சின்னு சொல்லலாம். அதனை தவிர்த்து புதிய தமிழகம் உட்பட எல்லா கட்சிகளுமே உப்புமா என்றழைக்கப்படும் சிறிய கட்சிகள்தான்- ஒரு சத விகித ஓட்டு வங்கியை வைத்துள்ள கட்சிகள்தான்.
அதாவது பிற மாநிலங்களிலும், குறிப்பாக, மகாராஷ்டிராவில் சிவசேனாவின் ‘split version’ ஏக்நாத் ஷிண்டே, மற்றும் சரத்பவாருடனான மோதலில் பிரிந்து வந்த அஜித்பவார் தலைமையிலான என்சிபி, அதுமட்டுமின்றி, புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் மற்றும் வட கிழக்கு பகுதியில் இருக்கக்கூடிய சிறிய சிறிய கட்சிகள் பாஜகவின் கூட்டணி கட்சிகள் என்கிற பெயரில் ஆலோசனையில் பங்கேற்றன. ஆக இதனை கூட்டணியாக, அதுவும் 38 கட்சிகள் பங்கேற்கும் கூட்டம் அப்படீன்னு பாஜக கூறும் பட்சத்தில் இதில் பெரும்பாலான கட்சிகள் ‘minimum vote bank’ உள்ள கட்சிகளாகதான் உள்ளன. அதாவது, 20 சதவிகித கட்சிகளை தவிர்த்து 80 சதவிகித கட்சிகள் மினிமம் வாங்கு வங்கியை உடைய கட்சிகள். ஆந்திர மாநிலத்தை பொறுத்தவரை பவன் கல்யாண் தலைமையிலான ஜன சேனா கட்சி கூட்டணி கட்சிகள் ஆலோசனையில் அங்கம் வகிச்சுது. ஆனால் அதுவும் பெரியளவில் வாக்கு வங்கி உள்ள கட்சி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக ஆந்திர மாநிலத்தை பொறுத்தவரை பாஜகவிற்கு செல்வாக்கு குறைவுதான். எனினும் ஒரு கூட்டணி கட்சியாக இருந்தாலும்கூட, பாஜக தன்னுடைய வலிமையை பிரதமர் மோடியின் பிம்பத்தை நம்பிதான் போட்டி போட வேண்டியது இருக்குது. எதிர்கட்சிகளை பொறுத்தவரை 26 கட்சிகள் சேர்ந்து இருக்காய்ங்க, பொதுவா மாநிலங்களில் வலிமையாக உள்ள கட்சிகள் பாஜகவிற்கு எதிராக உள்ள கட்சிகளாக இருக்குது. தமிழ்நாட்டில் திமுக, கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி, மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், பஞ்சாபில் ஆம் ஆத்மி இதுபோன்ற மாநிலங்கள் அளவில் பெரும் வலிமையாக இருக்கக்கூடிய கட்சிகள் நிறைய உள்ளன.
ஆனால், இதில் உற்று நோக்கினால், அதிமுக உள்ளிட்ட ஒரு சில கட்சிகளை தவிர மாநில அளவில் மிக வலிமை வாய்ந்த எந்த கட்சிகளும் பாஜகவின் என்டிஏ ஆலோசனையில் இல்லை என்பது நிதர்சன உண்மையும் குறிப்பிட வேண்டிய விஷயமாகவும் உள்ளது. இதற்கிடையே, எதிர்கட்சிகளுடன் இணையாமல் இருக்கும் ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரபாபு, தெலங்கானாவின் சந்திரசேகர் ராவ் உள்ளிட்ட இவர்களும் எதிர்க்கட்சி ஆலோசனையில் பங்கேற்கவில்லை என்றாலும் பாஜகவுடன் கைகோர்க்க தயாராக இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ளோணும்… ஒருவேளை இந்தியா என்ற பெயரிலான எதிர்க்கட்சி கூட்டணி ஓர் அளவிற்கு பெரும்பான்மை பிடிக்கும் பட்சத்தில் வெளியில் இருந்து தங்களது ஆதரவை இந்த கட்சிகள் கொடுக்கலாம் அல்லது அவர்களுடன் அப்போது இணையும் வாய்ப்புகள் இருக்கின்றன என்பது அரசியல் வட்டாரத்தில் பேசப்படும் செய்தி..
ஆக வரும் தேர்தல் இந்திய குடிமகனின் தலைவிதியை நிர்ணயிக்கப் போவதென்னவோ நிஜம்
நிலவளம் ரெங்கராஜன்
