32°C
விளம்பரம்
Advertisement

ஃபர்ஹானா – விமர்சனம்!

admin சேலம் Published: May 12, 2023 3 நிமிட வாசிப்பு Updated: May 13, 2023 Exclusive
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice



ஒரு குடும்ப பெண்- அதுவும் கட்டுப்பாடான மூன்று குழந்தைகளுக்கு தாயான முஸ்லீம் பெண்ணை முன்னிலைப்படுத்தி நவீன கால வாழ்க்கை முறையை அம்பலப்படுத்தி உள்ளார்கள்.. முஸ்லீம் பின்னணி என்றாலே சர்ச்சைதான் என்று பலரும் கருதும் சூழலில் வேலைக்குச் செல்லும் ஒரு முஸ்லீம் பெண்ணை மையமாக வைத்து ஒரு பக்கா கமர்ஷியல் கதையை சொல்ல முயன்றிருக்கிறார்கள்..!

அதாவது நடுத்தர முஸ்லீம் ஃபேமிலி பெண் அதுவும் மூன்று குழந்தைகளுக்கு அம்மா ஃபர்ஹானா (ஐஸ்வர்யா ராஜேஷ்). தனது கணவர் கரீம் (ஜித்தன் ரமேஷ்) நடத்தி வரும் செருப்பு கடையின் வியாபாரம் சரியாக போகாகதால் குடும்பத் தேவையை சமாளிக்க தானே வேலைக்கு செல்ல முடிவெடுக்கிறார். அதன்படி கால் சென்டர் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்த பின் ஃபர்ஹானாவின் குடும்ப பொருளாதார சூழல் கொஞ்சம் தெம்படைகிறது. இதனிடையே தனது குழந்தைக்கு உடனடியாக ஆப்ரேஷன் செய்ய வேண்டிய கட்டாயம் . அத்ற்கு மேலும் பணம் தேவைப்படுவதால், அவர் வேலை செய்யும் கால் சென்டரில் 3 மடங்கு அதிகம் இன்சென்டிவ் கொடுக்கும் மற்றொரு பிரிவில் பணியாற்ற ஒப்புக்கொள்கிறார். அந்த அபாயகரமான வேலையால் ஃபர்ஹானா வாழ்க்கைyi எப்படியெல்லாம் சிக்கல் ஏற்பட்டு , அதிலிருந்து மீள்கிறார் என்பது தான் படத்தின் கதை.

வறுமையான வாழ்க்கையுடன் நடமாடும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஃபர்ஹானாவாகவே மாறி அசத்துகிறார்.. குடும்பத்தினரின் எதிர்ப்புகளை சமாளித்து வேலைக்குச் செல்வது, கால் சென்டரில் புதிய ஹஸ்க் வாய்ஸ் ஜாப்பை எதிர் கொள்வது, அடுத்தடுத்து வரும் ஒரு குரல்காரனிடம் குழைவது என ரோலுக்கு பெரும் பலம் சேர்த்துள்ளார். அதிலும் பெரும்பாலான காட்சிகளை தன் பார்வை மூலமே எதிர் கொள்வது ரொம்பவே ரசிக்க வைக்கிறது.

ஐஸ்வர்யா ராஜேஷின் கணவராக வரும் ஜித்தன் ரமேஷ் பக்காவாக பொருந்தி வாவ் சொல்ல வைக்கிறார். தாடி, தொப்பியுடன் அப்பாவித்தமான முகமும், அவரது செயல்பாடுகளும் அந்த கதாபாத்திரத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக எழுதப்பட்டிருப்பதோடு, இஸ்லாமிய ஆண் வர்க்கத்தையே பெருமிதம் கொள்ள செய்கிறது.

படத்தின் பெரும்பாலான காட்சிகளில் குரல் மூலமாகவே தனி கவனம் ஈர்க்கும் டைரக்டர் செல்வராகவன், செகண்ட் பார்ட்டில் மிரட்டி இருக்கிறார்..! ஸ்ட்ரிக்டான அப்பாவாக கிட்டு, ஃப்ரி ஸ்பிரிட் மாடர்ன் கேர்ளாக ஐஸ்வர்யா தத்தா, தோழிக்கு ஆறுதல் கூறும் அனுமோல் என அனைவரும் தங்கள் கதாபாத்திரங்களை புரிந்து பர்பெக்டாக செய்துள்ளார்கள்..

படுபிசியான சென்னையின் இதயப் பகுதியான ஐஸ் ஹவுஸின் குறுகிய தெருக்களையும், பழமை மாறாத வீட்டையும் மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கும் கேமராமேன் கோகுல் பினாய், பணி சிறப்பு. ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்கள் எடுபடவில்லை . அதே சமயம், பின்னணி இசை கதையோடு கை கோர்த்து ஸ்மூத்தாக பயணித்திருக்கிறது. கதாபாத்திரங்களிடம் இருக்கும் பதற்றம், பயம், கோபம் என அனைத்தையும் சரியான முறையில் ரசிகர்களிடம் கொண்டு செல்ல, பின்னணி இசை பெரிய பங்காற்றியுள்ளது.

ஒருநாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’ படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இம்முறை ஏழை முஸ்லீம் குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மூலம் இணையவெளி ஆபத்துகளை அம்பலப்படுத்தவே பெரிதும் யோசித்திருக்கிறார் போலும்.. ஆனால் அன்றாடம் ஆறுவேளை தொழுகை செய்யும் , மூன்று குழந்தைகளுக்கு தாயானவள் பலான பேச்சில் ஈடுபடுவது நெருடலை கொடுத்தததை தவிர்க்க இயலவில்லை.

ஆனாலும் திரைக்கதையோட்டத்தில் ஃபர்ஹானா – கவனிக்க வைத்து விடுகிறாள்

மார்க் 3.5/5

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்