இன்பாக்ஸ் என்னும் இரட்டை முகப் பார்வை!

இன்பாக்ஸ் என்னும் இரட்டை முகப் பார்வை!

Facebook Inbox நான் கையாளும் முறைகள். ஒருவேளை உங்களுக்கு உபயோகமாக இருக்கலாம்.

1. வணக்கம் மேடம், Good Morning Madam என ஆரம்பித்து Professional ஆக இருக்கும் Text களுக்கு மட்டுமே முன்னுரிமை. அதிலும் எண் கேட்டால் முதலில் என் உதவியாளர் எண் கொடுத்துப் பேசச் சொல்லுவேன். அவர் விவரங்களைக் கேட்டு நானும் அதைச் சரி பார்த்த பின் என்னுடைய personal எண்ணில் இருந்து அழைப்பேன்.

2. நன்கு தெரிந்த நபர்கள் சொல்லும் வாழ்த்திற்கு பதில் அளிப்பேன். என்னை மதிக்கும் நண்பர்கள், Fans சொல்லும் சில Suggestions ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்தால் நன்றி சார்/ மேடம், பார்க்கிறேன் என பதில் கொடுப்பேன் .

3. Vulgar Comment ஆக இருந்தால் உடனே Block . ஒருமையில் பேசினால் Block. முன் அனுமதி இன்றி Audio call செய்தால் உடனே Block. பொட்டு வை, பூ வை, புடவை கட்டுன்னு Message அனுப்பினாலும் Block பண்ணுவேன். ஒரு சகோதரனாக நினைத்துச் சொல்கிறேன் தோழி என சொன்னாலும் Instant Block தான்.

4. ‘உங்களிடம் நிகழ்ச்சி தொகுத்தல் சம்பந்தமாகப் பேச வேண்டும்’ எனக் கூறினால் Social Media Profile சரி பார்ப்பேன். Original content, Original Picture இருந்தால் மட்டுமே கவனத்தில் எடுப்பேன். அவர்களிடமும் முதலில் Email முகவரி கொடுத்து விவரங்கள் அனுப்பச் சொல்லிய பிறகு தான் தொலைபேசி மூலம் பேசுவேன்.

5. ஆனாலும் கூட சில பேர் தொலைபேசி வாயிலாக Subject தாண்டி Conversation வளர்க்க முயலுவார்கள். அது கொஞ்ச நேரத்திலேயே தெரிந்துவிடும். அந்த ஒரு call தான். அதன் பிறகு அந்த கால் எடுக்கவே மாட்டேன்

6. தெரியாதவர்களிடம் மெசஞ்சரில் பேசுவதோ, பெரிதாக Conversations வளர்ப்பதோ, பெர்சனல் பகிர்வதோ கூடாது என உறுதியாக இருக்கிறேன்

7. Hi, saptiya போன்ற மெசேஜ்களை வருடக் கணக்கில் அனுப்பி கொண்டிருக்கிறார்கள். அதற்கு எப்போதும் Reply கொடுப்பதில்லை.
Social Media வில் அறிமுகமாகிக் குடும்பம் போல் பழகும் நண்பர்களும் இருக்கிறார்கள்😊. அவர்களுக்கு எப்போதும் பதில் கொடுப்பேன் ❤️
‘இப்படித்தான் இருக்க வேண்டுமா?’ என்று கேட்டால் இப்படி இருந்தால், தேவையில்லாத பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். நேரத்தையும் மிச்சப்படுத்தலாம் என்பது என் சொந்த அனுபவம்😊

மிக முக்கியமாக என் சோகங்களையோ, துக்கங்களையோ Social Media வில் பகிரவே மாட்டேன். அப்படி சோகங்களைப் பகிரும்போது தான், ‘ஆறுதல் சொல்கிறேன் தோழி’, ‘ஆயின்மெண்ட் தடவுகிறேன் தோழி🤪 என இன்பாக்சில் வரிசையில் வந்து நிற்பார்கள். ஆகையால் என் சவால்களையும் அதை நான் எதிர்கொண்டு வெற்றிகரமாக முடித்தது பற்றியும் மட்டுமே பகிர்வேன். 😊

யாரை, எங்கு, எப்படி, எந்த அளவுக்கு அனுமதிக்க வேண்டும் என்ற தெளிவு இருந்தால், பல பிரச்சனைகளை சரி செய்யலாம். ஆனால் அதை அடிபட்டு தான் நாம் புரிந்து கொள்ள முடியும். எதுவாக இருந்தாலும் No means No தான். Consent is Everything ❤️

Hema Rakesh

Related Posts