தமிழ் குரல் / AI Voice
சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் புது தீர்ப்பு கொடுத்த கள்ளக் காதல் உள்பட எத்தனையோ வகையான நல்ல பருவ காதல்கள் உண்டு! ஆனால் அத்தனையிலும் எத்தனை வயசு அல்லது வருஷமானா லும் மறக்க இயலாத காதல் என்றால் அது பள்ளிப் பருவக் காதல்தான். இதில் உண்மை என்ன வென்றால்அந்த அறியாப் பருவக் காதல்(கள்) கிட்டத்தட்ட 95 சதவீதமானவர்களுக்கு கை கூடுவதில்லை. அப்படி இணையாததாலேயே அவ்விளமைக் கால காதல் உணர்வை யாராலும் மறக்க முடியாமல் போகிறது. அதே சமயம் இந்த அடல்ட்டரி லவ் பற்றி தமிழில் கூட எக்கச்சக்கமான படங்கள் வந்து போயிருக்கின்றன. அதில் சில ஹிட் அடித்தும் இருக்கின்றன என்றாலும் நாளை ரிலீஸாக இருக்கும் 96 திரைப்படம் கொஞ்சம் ஸ்பெஷல்தான்.
இத்தனைக்கும் இப்படத்தின் கதையை பஸ் டிக்கெட்டின் பின் புறம் எழுதி விடலாம். அம்புட்டு சின்னதுதான். அதாவது ,, 1996ஆம் ஆண்டு பள்ளியில் படிக்கும் ஒரு விடலை ஜோடிக்கு ஏற்படும் நட்பு வழக்கம் போல் காதலாக மாறுகிறது. அப்புறம், வழக்கம் போல, அது பிரிந்து போய் விடுகிறது. இப்படியே கிட்டத்தட்ட 22 வருஷங்கள் கழிந்த நிலையில், இவர்களின் 96ம் ஆண்டு நண்பர்கள் சிலர் பள்ளியின் ரீ- யூனியனுக்கு ஏற்பாடு செய்கின்றனர். அதில், மீண்டும் சந்திக்கும் ஓல்ட் விடலை ஜோடியான விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா இடையே நடக்கும் அது இது எது என்பதுதான் படம்!
படம் பார்த்து விட்டு வெளியே வரும் போது நம் நண்பர் ஒருவர் சொன்னது போல் காமம் இல்லாத காதல்,கண்ணீர் இல்லாத நட்பு, ஒப்பனை இல்லாத த்ரிஷா, கற்பனை இல்லாத விஜய் சேதுபதி, பாசாங்கு இல்லாத நடிப்பு, மனதைக் கீறும் வசனங்கள், ஏக்கம் தரும் சூழல், பழசைக் கிளறும் மனசு என்று.. இவற்றை எல்லாம் ஒன்றாக 96The Movieயில் வாசிக்கலாம்., ஆம்… இந்த படம் வாசிப்பானு வத்தைத்தான் கொடுக்கிறது. படம் துவங்கியவுடன் அடுத்தடுத்த காட்சிகள் இப்படித்தான் நகர்ந்து க்ளைமாக்சில் இப்படித்தான் முடியும் என்று ஒவ்வொருவருக்கும் தெரிந்து விடுகிறது. ஆனாலும் முழு ஈடுபாட்டோடு நாயகன் ராம் என்ற பெயரில் வரும் விஜய் சேதுபதியுடனும், நாயகி ஜானு என்னும் ரோலில் வரும் த்ரிஷாவுடனும் ரசிகன் ஒவ்வொருவரும் இணைந்தே பயணிக்கிறார்கள். பெரும்பாலும் இது போன்ற உணர்வு நாவல் படிக்கும் போதுதான் வரும்.. கிட்டத்தட்ட அந்த உணர்வை இந்த சினிமா கொடுத்திருப்பது அதிசயம் என்றுதான் சொல்ல வேண்டும்.
இத்தனைக்கும் இதுநாள் வரை ஒளிப்பதிவாளராக இருந்த சி.பிரேம்குமார் என்பவர் முதன் முதலாக் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இக்கதையை உருவாக்கும் போதே காட்சிகளுக்கான இடம், நேரம், இசை, ஒளி, முகபாவம் அத்தனையையும் யோசித்து நோட்டில் எழுதி வைத்துக் கொண்டு அதை திரையில் கொண்டு வந்திருக்கிறார். அவரின் மெனக்கெடல் ஒவ்வொரு காட்சியிலும் பளிச்சிடுகிறது. அதிலும் அந்த சின்ன வயது த்ரிஷா மற்றும் விஜய் சேதுபதியாக வரும் ஜோடி தங்கர்பச்சானின் அழகி பாணியில் மனசைத் தொடுகிறார்கள். இதில் விஜய் சேதுபதியின் யங் ரோலில் வருபவர் எம்.எஸ்.பாஸ்கரின் மகன் ஆதித்யன். ஜூனியர் த்ரிஷாவாக வருபவர் கவுரி எஸ்.கிருஷ்ணன் என்ற புதுமுகம். இந்த ரெண்டு பேரையும் தனித்தனியா பாராட்டறதா அல்லது பொருத்தமான முகச் சாயல் கொண்ட இவர்களை கண்டறிந்து சரியாக ஸ்கிரினில் கொண்டு வந்த டைரக்டரைப் பாராட்டுவதா என்று சீட்டு குலுக்கி போட்டுப் பார்த்துதான் சொல்ல வேண்டும்.
இந்த இயக்குநர் பிரேம் திருக்குறள் இயற்றிய வள்ளுவரைக் கரைத்து குடித்தவர் போல.. ஃப்ரேம் பை ஃப்ரேம் எல்லா காட்சி களையும் ரொம்ப ஷார்ட் அண்ட் ஃப்ரீப்பாவே சொல்லி இருக்கிறார். ஆனால் எல்லா காட்சிகளும் அல்லது ஒவ்வொரு வசனமும் எக்கச்சக்கமான நினைவுச் சுரப்பி களை தோண்டி எடுத்து பொங்க, பொங்க வைக்கிறது. கேமராமேன் சண்முகமும், இசையமைத்த கோவிந்த் வஸந்தாவும் டைரக்டரின் ஒரு அங்கமாகவே மாறி மிக பொருத்தமாக தங்கள் பணியை செய்திருக்கிறார்கள். அதே சமயம் 90 களின் கோலிவுட் திரை இசைக் கடவுள் இளையராஜாவின் காதல் ஆலாபனையை படம் நெடுகிலும் தூவி கிறங்கடிக்கிறார்கள்.
மொத்தத்தில் ஒரு சினிமாவை காதலுடன் வாசிக்க விரும்பும் சகலரும் பார்த்தே தீர வேண்டிய படம்
மார் 4 / 5

