உ. பி-யில் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது. – அப்ப கருத்துக் கணிப்பு தகவல் என்னான்னு தெரியணுமா?

உ. பி-யில்  இறுதிக் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது. – அப்ப கருத்துக் கணிப்பு தகவல் என்னான்னு தெரியணுமா?

த்தரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 403 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் இறுதிக்கட்ட தேர்தல் வாரணாசி, அசம்கர்க், மாவ், ஜான்பூர், காஸிபூர் சந்தவுளி, மிர்ஸாபூர், படோஹி உள்ளிட்ட மாவட்டங்களில் இருக்கும் 54 தொகுதிகளுக்கு இன்று நடைபெற்று முடிந்தது. வாக்குப்பதிவு நடைபெற்ற 54 தொகுதிகளில் 11 தொகுதிகள் பட்டியலினத்தவர்களுக்கும், இரு தொகுதிகள் பழங்குடியின மக்களுக்காகவும் ஒதுக்கப்பட்டிருந்தன. 2 கோடிக்கும் மேற்பட்டோர் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தார்கள். காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த வாக்குப்பதிவு, மாலை 6 மணிவரை விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் 54.8 சதவீத வாக்குகள் பதிவாகின. வரும் 10 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகவுள்ளன.

உத்தரபிரதேச தேர்தலை பொறுத்தவரை, நான்குமுனைப் போட்டி நிலவகிறது. ஆளும் பாஜக, பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்தனியாக தேர்தலை சந்தித்துள்ளன. இருந்தபோதிலும், பாஜகவுக்கும், சமாஜ்வாதிக்கும் இடையேதான் நேரடிப் போட்டி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

இச்சூழ்நிலையில் உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளன. இதையடுத்து, ரீபப்ளிக், இந்தியா டுடே, டைம்ஸ் நவ் உள்ளிட்ட தொலைக்காட்சிகளின் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன. அதன்படி, எந்தெந்த மாநிலங்களில் யார் – யார் ஆட்சியமைக்கப் போகிறார்கள் என்பது குறித்த தகவல்கள் இதோ: .

உத்தரபிரதேச தேர்தல் கருத்துக்கணிப்பு – ரீ பப்ளிக்

பாஜக – 262 – 277

சமாஜ்வாதி – 119 – 134

பகுஜன் சமாஜ் – 7- 15

காங்கிரஸ் –

மற்றவை – 2- 6

நியூஸ் எக்ஸ்

பாஜக – 211 – 225

சமாஜ்வாதி – 146 – 160

பகுஜன் சமாஜ் – 14 – 24

காங்கிரஸ் – 4- 6

மற்றவை – 1

error: Content is protected !!