மும்பை ; 20 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் தீ

மும்பையில் இன்று காலை அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிர் இழந்தனர். 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

மும்பையின் தார்டியோ பகுதியில் நானா சவுக் என்ற இடத்தில் கமலா பில்டிங் என்ற பெயரில் 20 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இன்று காலை இந்த குடியிருப்பின் 18வது தளத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயை அணைக்கும் பணியில் 13 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன.

இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மீட்பு பணியும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். 15 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு பாட்டியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. தீயணைப்பு மற்றும் மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

error: Content is protected !!