அமெரிக்காவின் பல மாநிலங்களை அல்லோகலப் படுத்திய சூறாவளிப் புயல்!

அமெரிக்காவின் பல மாநிலங்களை அல்லோகலப் படுத்திய சூறாவளிப் புயல்!

மெரிக்காவில் 5 மாநிலங்களில் சுழல் சூறாவளி புயல் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு கடும் சேதங்களை ஏற்படுத்தி உள்ளது. அடுத்தடுத்து தாக்கிய சூறாவளி காரணமாக 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. சூறாவளி தாக்கிய கெண்டக்கி மாகாணத்தில் அவசர நிலையை அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலை சாய்த்து உருட்டி இருக்கிறது. அமேசான் நிறுவனத்தின் பொருள்கள் வினியோக மையம் கடுமையான பாதிப்புக்கு இலக்காகி உள்ளது பல தொழிற்சாலைகள் இருக்கும் இடம் தெரியாமல் அழிக்கப்பட்டுள்ளன. புயலுக்குப் பின்னர் அமெரிக்க அதிபர் ஜோ பிடேன் அவருக்கும் மக்களுக்கும் புயலால் பாதிக்கப்பட்ட 5 மாநிலங்களில் மக்களுக்கும் நம்பிக்கையூட்டும் பல செய்திகளை வெளியிட்டார்.

புயல் சேதம் குறித்து அதிகாரிகள் எனக்கு எல்லாத் தகவல்களையும் தெரிவித்திருக்கிறார்கள் அவற்றின் அடிப்படையில் ஐந்து மாநிலங்களின் ஆளுநர்கள் உடன் உடனடியாக தொடர்புகொண்டு பேசியிருக்கிறேன் நிவாரண பணிகளுக்கும் புயலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவுவதற்கு தேவையான மத்திய நிதி மாநில ஆளுநர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

கெண்டகி மாநிலம் கடுமையான பாதிப்புக்களை சந்தித்து இருப்பதால் அங்கு அவசர நிலை அறிவித்து நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஆளுநர் என்னிடம் கூறினார் .அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபரின் செய்திகளில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுழல் சூறாவளி புயல் பாதித்த 5 மாநிலங்களின் பெயர்கள் வருமாறு

அரக்கன்சாஸ், இல்லினாய்ஸ், கென்டக்கி, மிசோரி, டென்னசி,

இந்த ஐந்து மாநிலங்களில் கென்டக்கி மாநிலத்தில்தான் உயர்ந்த பட்சமாக 22 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கெண்டகி மாநிலத்தின் 70 முதல் 100 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று மாநில ஆளுநர் ஆன்டி பெஷியர் கூறினார். இம்மாநிலத்தில் உள்ள மே ஃபீல்டுஎன்ற நகரத்தில் உள்ள மெழுகுவர்த்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றில் 110 பேர் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது புயல் தாக்கியது அந்த தொழிற்சாலை இடிந்து தரைமட்டமாக இப்பொழுது கிடைக்கிறது. மாநிலம் இதுவரை சந்தித்த புயல்களில் சனிக்கிழமை சந்தித்த புயல் தான் மிகவும் மோசமானது என்று ஆளுநர் கூறினார்.

இல்லினாய்ஸ் மாநிலத்தில் உள்ள அமேசான் வினியோக மையத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.

டென்னசி மாநிலத்தில் 4 பேரும் அரக்கன்சாஸ் மாநிலத்தில் 2 பேரும் மிசோரி மாநிலத்தில் 2 பேரும் உயிரிழந்தனர்.

சூழல் சூறாவளிப் புயல் ஐந்து மாநிலங்களிலும் சேர்த்து மொத்தமாக 400 கிலோ மீட்டர் தூரம் சென்றுள்ளது.

400 கிலோ மீட்டர் தூரத்தை பாதித்த சூழல் சூறாவளிப் புயல் இதுதான் என்று கூறப்படுகிறது.

error: Content is protected !!