ஒவ்வொரு இந்தியரும் அயோத்தி போய் வர வேண்டும்- பிரதமர் மோடி விருப்பம்!
நம் நாட்டில் உள்ள அயோத்தி நகரை சர்வதேச அளவில், ஹிந்து மத மற்றும் சுற்றுலா மையமாக மாற்ற, உ.பி., அரசு, பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.குறிப்பாக, ஹிந்து கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தின் சின்னமாக, அயோத்தியை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் மிகப் பெரிய ஆன்மிக நகரமாக உருவாக்கவும் திட்டமிடப் பட்டுள்ளது. அயோத்தியில் சர்வதேச விமான நிலையம் அமைக்கவும், ராமர் கோவிலுக்குச் செல்ல, நான்கு வழி விரைவு பாதை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. விமான நிலையம் அமைக்க, 450 கோடி ரூபாய் செலவில், 158 ஏக்கர் நிலத்தை, மாவட்ட நிர்வாகம் கையகப்படுத்தியுள்ளது. விமான நிலையத்துக்கு, ‘மரியாதா புருஷோத்தமன் ராமன் விமான நிலையம்’ என, பெயர் வைக்கவும், மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முதல் கட்டமாக, அயோத்தியை பசுமை நகரமாக மாற்றும் வகையில், அரசு விடுதிகள், ஓட்டல்கள், வெளி மாநிலங்களின் இல்லங்கள் ஆகியவற்றை கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அயோத்தி நகர வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பான ஆய்வு காணொளி காட்சி மூலம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த ஆய்வில் பங்கு கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி அயோத்தி நகரம் இந்தியாவின் மிகச்சிறந்த பாரம்பரியங்களை பிரதிபலிப்பதாக அமைய வேண்டும். அதே நேரத்தில் எதிர்கால சுற்றுலா மற்றும் யாத்திரைத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய உள்கட்டமைப்பு வசதிகளையும் கொண்டதாக அமைய வேண்டும் என் விருப்பம் தெரிவித்தார்.
அயோத்தி நகருக்கான வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆய்வு காணொலிக் காட்சி மூலம் இன்று (26-6-2021) நடைபெற்றது.
இந்த ஆய்வில் உத்தரபிரதேச முதல்வர். துணை முதல்வர்கள், அமைச்சர்கள் உயர் அதிகாரிகள் பங்கு கொண்டனர்.
ஆய்வுக் கூட்டம் பற்றிய செய்தியினை பிரதமரின் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
அயோத்தி நகரத்தை ஒரு ஆன்மீக மையமாகவும் உலக சுற்றுலா தலமாகவும் அதே நேரத்தில் நவீன நகரத்துக்கு உரிய அனைத்து வசதிகளையும் இந்த ஸ்மார்ட் சிட்டி யாகமும் வளர்த்தெடுக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
ஆசிரமங்கள், மடங்கள், நவீன ஓட்டல்கள், பல்வேறு மாநிலங்களின் அலுவலகங்கள் ஆகியவற்றோடு சுற்றுலா வாசிகளுக்கு உதவுவதற்கான மையமும் அமையவேண்டும்.
அயோத்தி நகரத்தில் தலைசிறந்த உலகு அருங்காட்சியகம் ஒன்றும் அமைக்கப்பட வேண்டும்.. மாசு உருவாக்காத பசுமை நகரமாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.
இந்திய தலைசிறந்த பாரம்பரியங்களில் வெளிப்பாடாக அயோத்தி மிளிர வேண்டும். அதே நேரத்தில் நம்முடைய வளர்ச்சி மாற்றங்களின் சிறப்பான உள்கட்டமைப்பு வசதிகளும் அங்கு ஏற்படுத்தப்பட வேண்டும்.
எதிர்கால தலைமுறையினர் தன் வாழ்நாளில் ஒருமுறையாவது அயோத்தி நகருக்கு செல்ல வேண்டும் என்று விரும்பும் வகையில் அயோத்தி நகரம் அமைய வேண்டும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
அயோத்தி நகரத்தின் கலாச்சார தனித்துவத்தை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டாடும் வகையில் கலாச்சார உயிர்த்துடிப்போடு அயோத்தி நகரம் அமைய வேண்டும் அதே நேரத்தில் புதுமையான நதிகள் உருவாக்கப்பட வேண்டும்.
ராமர் மக்களை ஒருங்கிணைக்கும் திறன் கொண்டது மக்கள் அனைவரின் ஆரோக்கியமான ஒத்துழைப்பு குறிப்பாக இளைஞர்களின் ஒத்துழைப்போடு அயோத்தி நகரத்தை வளர்த்தெடுக்க வேண்டும்.
நகரில் ஓடும் சரயூ நதியில் படகு போக்குவரத்து திட்டமிட்டு உருவாக்கப்பட வேண்டும் அதேநேரத்தில் அயோத்தி நகர தெருக்களில் சைக்கிளில் செல்வோரும், நடந்து செல்வோரும் எந்த சிக்கலும் இல்லாமல் செல்வதற்கு உதவும் வகையில் போக்குவரத்து பராமரிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.