மிரட்டறாய்ங்கப்பூ – மத்திய அரசின் போக்கு குறித்து ட்விட்டர்!

மிரட்டறாய்ங்கப்பூ – மத்திய அரசின் போக்கு குறித்து ட்விட்டர்!

ப்போது சகலரும் பயன்படுத்து சமூக ஊடகங்களுக்கான புதிய கட்டுப்பாடு விதிமுறைகளை பின்பற்ற அளிக்கப்பட்ட காலக்கெடு இரண்டு தினங்களுக்கு முன்னரே (25/05/21) முடிந்து விட்டநிலையில், இந்திய சமூக ஊடக நிறுவனமான கூ (Koo ) மட்டுமே விதிமுறைகளை செயல்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிறுவனம், குறை தீர்ப்பு அதிகாரி உள்ளிட்டோரை நியமனம் செய்துள்ளது. முன்னணி சமூக ஊடக நிறுவனங்களான ஃபேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட நிறுவனங்கள் இன்னமும் இதற்கான நடவடிக்கையை எடுக்காத நிலையில் மத்திய அரசு, ‘புதிய விதிகளுக்கு எதிராக கடைசி நேரத்தில் வாட்ஸ்அப் வழக்கு தொடுத்திருப்பது துரதிர்ஷ்டவசமானது. இது புதிய விதிகளை நடை முறைப் படுத்துவதைத் தடுக்கும் முயற்சி ஆகும். தனி உரிமையை அடிப்படை உரிமை என்று மத்திய அரசு அங்கீகரிக்கிறது. அதனை குடிமக்களுக்கு உறுதிப்படுத்துவதிலும் உறுதியாகவும் உள்ளது’, என்று தெரிவித்துள்ளது .

இந்தியாவில் மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம், கொரோனா பெருந்தொற்றை கையாளும் அரசின் நடவடிக்கைக்கு எதிரான விமர்சனங்கள் என பல விவகாரங்களில் சர்ச்சைக்குரிய இடுகைகளை கூகுள், ட்விட்டர், பேஸ்புக், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதள நிறுவனங்கள் வெளியிட்ட நிலையில் மத்திய அரசு அண்மையில் வெளியிட்ட புதிய விதிமுறைகள் கருத்துரிமை மற்றும் தனிநபர் சுதந்திரத்தை பறிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் இந்திய அரசின் புதிய இணைய விதிகளை பின்பற்ற தயார் என்று ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. அதே சமயம் மத்திய அரசு காவல்துறை மூலம் மிரட்டி பணிய வைக்கும் போக்கை கடைபிடிப்பதாக டிவிட்டர் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிப்பதற்காக சமூக ஊடகங்களின் கட்டுப்பாட்டு விதிமுறைகளில் மத்திய அரசு புதிய நடைமுறைகளை கொண்டு வந்து இருப்பதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

ஆனால் டூல்கிட் டாக்குமெண்ட் ரிலீஸானதை ஒட்டி அண்மையில் டெல்லியில் உள்ள ட்விட்டர் இந்தியா அலுவலகத்தில் போலீசார் சோதனை நடத்திய நிலையில் அதனை மிரட்டி பணிய வைக்கும் முயற்சி என்று வெளிப்படையாக அந்நிறுவனம் குற்றம் சாட்டியிருப்பது மத்திய அரசை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதனிடையே டிவிட்டர் நிறுவன குற்றச்சாட்டை டெல்லி போலீசார் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். சட்டப்படியே நடவடிக்கை மேற்கொண்டதாகவும், ட்விட்டர் நிறுவனம் அனுதாபம் தேடும் நோக்கத்துடன் அறிக்கை வெளியிட்டுள்ளதாகவும் டெல்லி போலீசார் தெரிவித்தனர்.

error: Content is protected !!