இந்தியாவில் 74% பேருக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்கவில்லை! – உலக வங்கி தகவல்!
நல்ல ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்துக்கு ஆரோக்கியமான உணவு அவசியம். இதய நோய், நீரிழிவு மற்றும் புற்றுநோய் போன்ற பல நாள்பட்ட தொற்றாத நோய்களுக்கு எதிராக இது உங்களைப் பாதுகாக்கிறது. பலவகையான உணவுகளை உட்கொள்வது மற்றும் குறைந்த உப்பு, சர்க்கரை மற்றும் நிறைவுற்ற மற்றும் தொழில்துறையில் உற்பத்தி செய்யப்படும் டிரான்ஸ்-கொழுப்புகளை உட்கொள்வது ஆரோக்கியமான உணவுக்கு அவசியம். ஆரோக்கியமான உணவு என்பது வெவ்வேறு உணவுகளின் கலவையை உள்ளடக்கியது. இவற்றில் அடங்கும் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது
அதே சமயம் உலகின் 5வது மிகப் பெரிய பொருளாதார சக்தியாக உருவெடுத்துள்ள இந்தியா, விரைவில் 3வது இடத்தை அடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் நம் நாட்டில் உள்ள 74 சதவீத மக்களுக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்கவில்லை என்று உலக வங்கியின் அறிக்கையின் மூலம் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
2021ம் ஆண்டு திரட்டப்பட்ட தரவுகளின் அடிப்படையில் அறிக்கை வெளியிட்டுள்ள உலக வங்கி, பல்வேறு நகரங்களில் ஆரோக்கியமான உணவுக்கான விலை மிகவும் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக, மும்பையில் கடந்த 5 ஆண்டுகளில் உணவுப் பொருட்களின்விலை 65 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், ஆனால், ஊதியம் 28 முதல் 37 சதவீதம் வரை மட்டுமே அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் வளர்ச்சி மக்களுடன் சேர்த்து தான் இருக்க வேண்டுமே தவிர, தனியாக நாடு வளர முடியாது. அதனால் மக்களின் அடிப்படை தேவையான உணவே ஆரோக்கியமாக கிடைக்காத போது, நாடு எப்படியான வளர்ச்சி அடைகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.