நெய்வேலி என்.எல்.சி-யில் 575 காலியிடங்கள்: பொறியியல் பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
தமிழகத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி (NLC), டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டதாரிகளுக்கான பயிற்சிப் பணியிடங்களை (Apprentice) அறிவித்துள்ளது.
பணி விவரங்கள்:
1. பட்டதாரி பயிற்றுநர் (Graduate Apprentice)
-
காலியிடங்கள்: 357
-
பிரிவுகள்: மெக்கானிக்கல் (94), எலக்ட்ரிக்கல் (93), சிவில் (34), மைனிங் (49), கம்ப்யூட்டர் சயின்ஸ் (49) உள்ளிட்ட பல்வேறு துறைகள்.
-
உதவித் தொகை: மாதம் ரூ. 15,028
2. தொழில்நுட்ப பயிற்றுநர் (Technician Apprentice)
-
காலியிடங்கள்: 218
-
பிரிவுகள்: மெக்கானிக்கல் (57), எலக்ட்ரிக்கல் (66), சிவில் (15), மைனிங் (32), பார்மசிஸ்ட் (5) உள்ளிட்ட துறைகள்.
-
உதவித் தொகை: மாதம் ரூ. 12,524
முக்கியத் தகவல்கள்:
-
கல்வித் தகுதி: 2021 முதல் 2025-க்குள் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் பொறியியல் பட்டம் (B.E/B.Tech) அல்லது டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
-
தேர்வு முறை: நேர்காணல் கிடையாது. கல்வித் தகுதியின் மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
-
விண்ணப்பிக்கும் முறை: https://www.nlcindia.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
-
விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.01.2026
இந்த பயிற்சி வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய ஆந்தை வேலைவாய்ப்பு என்ற லிங்க்-கை க்ளிக் செய்து அறிவிப்பினைப் பார்வையிடவும்.
தகுதியுள்ள இளைஞர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உடனடியாக விண்ணப்பிக்கவும்!


