பல வெற்றி படங்களை இயக்கிய மனிவாசகத்தின் மகன் காந்தி மணி வாசகம் முதல் முயற்ச்சியில் வெளிவந்து இருக்கும் படம் தான் களவானி மாப்பிள்ளை
கதைக் களம் நகைச்சுவை மையப்படுத்தி தன் தந்தை பாணியில் திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார்
வாகனத்திலும், தண்ணீரிலும் கண்டம் என்று ஜோதிடர் சொல்லியதால் நாயகனை வண்டி யின் வாசம் தெரியாமல் வளர்க்கிறார் அவரின் தாயார்
நாயகன் வளர்ந்து காதலில் சிக்கி கல்யாணத்துக்கு கார் ஒட்டத் தெரிந்த இருக்க வேண்டும் என மாமியார் சொல்ல பின் வரும் பிரச்னைகைளை காமடி கலட்டாவாக சொல்லியிருக்கும் படம் களவாணி மாப்பிள்ளை
வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் தினேஷ் இப்படத்தின் நாயகனாக நடித்திருக்கிறார். காமெடியில் ஓரளவிற்கு நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்
அறிமுகக் காட்சியிலேயே ரேஸ் பைக் ஓட்டி அசர வைக்கிறார் அதிதி மேனன்.
அழகாக இருக்கிறார். கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.
ஆனந்தராஜ், சாம்ஸ், முனிஷ்காந்த் ஆகியோரது கூட்டணி நம்மை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறது.
மாமியாராக நடித்திருக்கும் தேவயானி, கார் ஓட்ட தெரியாததை மறைத்து தன்னிடம் பொய் சொன்னதற்காக கணவர் ஆனந்தராஜையே ஓரங்கட்டி டம்மி பீஸாக வைத்திருக்கும் அளவுக்கு கறார்காரர். தனக்கே உரிய பாணியில் நடித்து அசத்தி இருக்கிறார்
காமெடியை மையமாக வைத்து படம் இயக்கி இருக்கிறார் இயக்குனர் காந்தி மணிவாசகம். காமெடி கைகொடுத்திருக்கிறது.
படத்தில் ஆங்காங்கே படத்தில் சில குறைகள் இருந்தாலும் நகைச்சுைவை அதை மறைத்து விடுகிறது
களவாணி மாப்பிள்ளை காமடி சரவெடி
நடிகர் நடிகைகள்
தினேஷ் ( தேவா ), அதிதி மேனன் ( துளசி ), ஆனந்த்ராஜ் (கார்மேகம் ) தேவயாணி(ராஜேஸ்வரி ) ரேணுகா, மனோபாலா( டாக்டர் ), மகாநதி சங்கர், மொட்டை ராஜேந்திரன் ( வணங்காமுடி ), சாம்ஸ் ( ஸ்டெப்னி ), முனீஸ்காந்த் ( வில்லங்கம் ) , ஜோதி, லல்லு, கிரேன் மனோகர், நாஞ்சில் விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – சரவண்ணன் அபிமன்யு
இசை – என்.ஆர்.ரகுநந்தன்
பாடல்கள் – மோகன்ராஜன், ஏக்நாத்
கலை – மாயா பாண்டி
எடிட்டிங் – பொன் கதிரேசன்
நடனம் – தினேஷ்
ஸ்டன்ட் – திலீப்சுப்பராயன்
தயாரிப்பு மேற்பார்வை – சிவசந்திரன்
நிர்வாக தயாரிப்பு – ஸ்டில்ஸ் ராபர்ட்
இணை தயாரிப்பு – திருமூர்த்தி
தயாரிப்பு – ராஜேஸ்வரி மணிவாசகம்.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – காந்தி மணிவாசகம்.
பாடல்கள்
1. என்ன புள்ள செஞ்ச – மோகன்ராஜா
2. வா கள்ளி முன்னால – மோகன்ராஜா
3. ஒரே ஒரு காரு – ஏக்நாத்
4. குறுஞ்சி குறிஞ்சி பூ – மணிஅமுதன்


