இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 550 அப்ரன்டிஸ் பணிவாய்ப்பு!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 550 அப்ரன்டிஸ் பணிவாய்ப்பு!

த்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளது. இந்த வங்கியில் தற்போது, ஒராண்டு ஒப்பந்த அடிப்படையில் 550 அப்ரன்டிஸ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அப்ரென்டிஸ் பணிக்காலத்தில் ஸ்டைபண்ட் வழங்கப்படும்.

பணியிடங்கள் எங்கே?

மொத்தம் உள்ள 550 அப்ரன்டிஸ் காலியிடங்களில், தமிழகத்தில் மட்டும் 130 பணியிடங்கள் உள்ளன. புதுச்சேரியில் 14 இடங்களும், கேரளாவில் 25 இடங்களும், கர்நாடகாவில் 50 இடங்களும் உள்ளன.

கல்வி தகுதி என்ன?

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பிக்க, 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

வயது வரம்பு சலுகை

எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒ.பி.சி., பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

கட்டணம்

விண்ணப்ப கட்டணம் ரூ.944. எஸ்.சி., எஸ்.டி, பிரிவினருக்கு ரூ.708. பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.472 விண்ணப்பிக்க கட்டணம் செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படுவது எப்படி?

ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?

https://www.iob.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

error: Content is protected !!