32°C
விளம்பரம்
Advertisement

இந்தியன் ரயில்வேயில் வேலைவாய்ப்பு!

admin சேலம் Published: August 31, 2018 1 நிமிட வாசிப்பு Updated: September 1, 2018 Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice



இந்திய ரயில்வேயில் தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 413 அப்ரென்டீஸ் அடிப்படையில் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பிரிவுகள் மற்றும் காலியிட விபரம்: வெல்டரில் 28, டர்னரில் 23, கார்பென்டரில் 23, பிட்டரில் 87, எலக்ட்ரீஷியனில் 71, பெயின்டரில் 3, ஆபிஸ் அசிஸ்டன்ட் கம் கம்ப்யூட்டர் ஆபரேட்டரில் 5, ஹெல்த் சானிடரி இன்ஸ்பெக்டரில் 3, பிட்டரில் 69, வெல்டரில் 69ம், மெஷினிஸ்டில் 5, எலக்ட்ரீஷியனில் 9, மோட்டார் மெக்கானிக்கில் 3, டர்னரில் 3, ஸ்டெனோ 4, கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் புரோகிராமர் 8 என 413 காலியிடங்கள் உள்ளன.

வயது: விண்ணப்பதாரர்கள் 15 – 24 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்புக்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும். இதன் பின்னர் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தின் மூலமாக ஐ.டி.ஐ., படிப்பை உரிய டிரேடு பிரிவில் முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி எப்படி: பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் மற்றும் ஐ.டி.ஐ., படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நாள் : 2018 செப்., 9

விபரங்களுக்கு:  ஆந்தை வேலைவாய்ப்பு

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்