இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 26 மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதாக மாநிலங்களவையில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மாணவர்களின் தற்கொலை குறித்த கேள்விக்கு மாநிலங்களவையில் னவரி 2 அன்று உள்விவகாரத்துறை அமைச்சர் எச்.சி.அகிர் கூறியதாவது.

2016ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 9 ஆயிரத்து 474 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர். இதன் இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 26 மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆனால் 2007ம் ஆண்டு மொத்தம் 6 ஆயிரத்து 248 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். அந்தாண்டு ஒவ்வொரு நாளும் சராசரியாக 17 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். ஆனால் கடந்த 10 வருடத்தில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் விகிதம் 52 சதவிகிதம் அதிகரித்து தற்போது தினமும் 26 மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். அதாவது கடந்த 10 ஆண்டுகளில் 75 ஆயிரம் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர்.

2016ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகபட்சமாக நாள் ஒன்றுக்கு 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். அதாவது 2016ல் மட்டும் 1350 மாணவர்கள் அந்த மாநிலத்தில் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். அதற்கடுத்த நிலையில் மேற்கு வங்கத்தில் இருக்கிறது. ஆண்டிற்கு 1147 மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். அதற்கடுத்த இடத்தில் தமிழகம் இருக்கிறது. ஆண்டிற்கு 981 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களில் 25 சதவிகித மாணவர்கள் தேர்வு தோல்வி காரணமாகவே தற்கொலை செய்து கொள்கின்றனர். 2007 முதல் 2016 வரை 23 ஆயிரம் மாணவர்கள் தேர்வு தோல்வி காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். இதன் பங்கு தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களில் 30 சதவிகிதம் பேர் ஆவர். உலக அளவில் இளைஞர்கள் அதிகளவில் தற்கொலை செய்து கொள்ளும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கிறது. குறிப்பாக 15 வயது முதல் 29 வயது வரை உள்ள இளைஞர்கள் அதிகளவில் தற்கொலை செய்து கொள்கின்றனர்.