2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்து நீக்கம் – கேள்வி!?

2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்து நீக்கம் – கேள்வி!?

துவரைக்கும் அச்சடிக்கப்பட்ட 2000 ரூபாய் நோட்டுக்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 375 கோடி இருக்கும். ஒரு நோட்டு அச்சடிக்க ஆன செலவு மட்டும் சராசரியாக 4 ரூபாய்.. ஆக மொத்தம் அச்சடிக்கிற செலவு மட்டும் 1500 கோடி ரூபாய். இந்த நீளமான நோட்டை ஏடிஎம் மெசின்களில் அடுக்க முடியாததால் மெசின்களை மாற்றியமைக்க வேண்டி இருந்தது. நாட்டில் ஏடிஎம்கள் எண்ணிக்கை அப்போது சுமார் 2 இலட்சம். ஒரு ஏடிஎம்மின் விலை சராசரியாக 7 இலட்சம் ரூபாய். மாற்றியமைக்க ஏடிஎம் விலையில் 10% ஆனது என்றால் மொத்த செலவு, கிட்டத்தட்ட 1400 கோடி.

இது போக 15 இலட்சம் பொதுத் துறை, தனியார் துறை வங்கி ஊழியர்களுக்கு பயிற்சிக்கான செலவு, 375 கோடி நோட்டுகளை நாடு முழுக்க லாரிகளில் கொண்டு சென்று விநியோகிக்க ஆன செலவு, எல்லாத்தையும் சேர்த்தால், 2000 ரூபாய் நோட்டுகளை அவசர கோலத்தில் அறிமுகப்படுத்தி, இப்போது திரும்பப் பெற்ற, துக்ளக் கோமாளித் தனத்தினால் ஆன மொத்த தண்ட செலவு 5000 கோடி ரூபாயைத் தாண்டும்!

இது போக கள்ள நோட்டு ஒழிப்பு, கருப்பு பண ஒழிப்பு, மின்னணு வர்த்தகப் பரவலாக்கம் என எல்லா குறிக்கோள்களிலும் முற்று முழுவதுமாகத் தோற்ற, இந்திய நாட்டின் வரலாற்றிலேயே, மனிதனால் நிகழ்த்தப்பட்ட ஆகப்பெரிய பொருளாதார பேரழிவுத் தாக்குதலான பண மதிப்பிழப்பினால், பொருளாதாரம் 1.5% சுருங்கியதால், ஆண்டு ஒன்றுக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பு மட்டும் 2,50,000,00,00,000 (இரண்டேகால் இலட்சம் கோடி) ரூபாய்! ஏற்பட்ட வேலை வாய்ப்பு இழப்பு மட்டும் 15,00,000! ஆமாம், அதே பதினைந்து இலட்சம்!

உயிரிழப்பு நூற்றுக்கு மேல்!

கடைசிவரை விடை தெரியாத கேள்வி,

ஏன் வந்துச்சு? எதுக்கு வந்துச்சு?

விஜய்ராஜ்

error: Content is protected !!