32°C
விளம்பரம்
Advertisement

“புதுப் பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதிதானே திறக்க வேண்டும். பிரதமர் ஏன் திறக்கிறார்” – ராகுல் காந்தி கேள்வி !.

admin Published: May 21, 2023 3 நிமிட வாசிப்பு Exclusive
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க / Listen to News


ந்திய மக்களவைச் செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ,“சென்ட்ரல் விஸ்டா என்று அழைக்கப்படும் புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் கட்டுமானம் தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த புதிய கட்டிடம் சுயசார்பு இந்தியா திட்டத்தின் உணர்வை குறிக்கிறது. பழைய கட்டிடத்தில் உள்ள மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் எம்.பி.க்கள் அமர்வதற்கு போதிய இடவசதி இல்லை. இதனால் மக்கள் பிரதிநிதிகளின் பணித்திறன் பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்தே புதிய கட்டிடம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி வரும் 28-ம் தேதி புதிய கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்துவைக்கிறார்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை அடுத்து மோடி பாராளுமன்ற கட்டிடத்தை திறந்து வைப்பதற்கு ராகுல் காந்தி உள்ளிட்ட பல எதிர்க்கட்சி தலைவர்கள் ஆட்சேபனை தெரிவித்து உள்ளனர். “பிரதமர் மோடி, அரசு நிர்வாகத்தில் உள்ளார். ஜனாதிபதி, இந்தியாவின் தலைவராக உள்ளார். அவர்தான் பாராளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க வேண்டும்” என்று கருத்து கூறி உள்ளனர்.

தற்போது உள்ள பாராளுமன்ற வளாகம், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப் பட்டது. எட்வின் லுட்யன்ஸ் (Edwin Lutyens) மற்றும் ஹெர்பபேர்ட் பேக்கர் (Herbert Baker) வடிவமைத்து, பிப்ரவரி 12, 1921 ஆம் தேதி அடிக்கல் நாட்டி, 83 லட்ச ரூபாய் செலவில், ஆறு வருடங்களில் முடிவு அடைந்தது. 1927 ஜனவரி 18 அன்று, அன்றைய கவர்னர் ஜெனரல் லார்டு இர்வினால் (Lord Irwin), தற்போதைய பாராளுமன்ற வளாகம் திறக்கப் பட்டது. iwtha பாராளுமன்ற வளாகம், நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அப்போது உள்ள தொழில் நுட்பத்திற்கு ஏற்றவாறு கட்டப்பட்டு உள்ளது. தற்போது பல தொழில் நுட்பங்கள் வளர்ந்து விட்டன. நிலம் நடுக்கத்தை தாங்கும் வகையிலும், நவீன தொழில் நுட்பத்துடன், பல்வேறு வசதிகளுடன், அடுத்து பல வருடங்களுக்கும் தாங்கி நிற்கும் படியாக, பல்வேறு சிறப்பு அம்சங்களுடன், புதிய பாராளுமன்றம் கட்டப்பட்டு உள்ளது. குறிப்பாக, பல மொழி பேசுபவர்களும் இருப்பதால், அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப, அவரவர் விரும்பும் மொழிகளில், கேட்கும் வகையில், பல்வேறு வசதிகள் செய்யப்பட உள்ளன. மேலும், அனைத்து அலுவலகங்களும் ஒரே இடத்தில் இருப்பதால், வேலைகள் சீக்கிரம் நடைபெறும்.

பல்வேறு அலுவலக கட்டிடங்கள், வாடகைக்கு உள்ளது. அதன் மூலம், வருடம் தோறும், ஆயிரம் கோடி செலவிடப் படுகின்றது. புதிய கட்டிடத்தின் மொத்த தொகையே 927 கோடி. செலவிட இருக்கும், மொத்த பணத்தையும், ஒரே வருடத்தில், லாபம் பெற்று விடலாம் என்பதே எதிர் பார்ப்பு. ஏற்கனவே இருக்கும் பாராளுமன்ற வளாகம், அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு, மற்ற பணிகளுக்கு பயன் படுத்தப்படும்.

ஆக வரும் மே 28 ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்துவைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ராகுல்காந்தியும் ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார். மேலும் மே 28 ஆம் தேதியானது இந்துத்துவா மறைந்த தலைவர் விடே சாவர்க்கரின் பிறந்தநாள் என்பதால் அன்றைய தினத்தை திட்டமிட்டே தேர்வு செய்துள்ளனர் என்று பாஜக மீது காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் விமர்சனத்தை முன்வைத்துள்ளனர்.

“பிரதமர் என்பவர் இந்திய அரசாங்கத்தின் தலைவர் ஆனால் குடியரசுத் தலைவர் ஆகிய ஜனாதிபதியே இந்திய தேசத்தின் தலைவர். புதிய நாடாளுமன்றத்தை அவரை அழைத்து திறக்காமல் பிரதமரை வைத்து திறப்பது குடியரசுத் தலைவருக்கும் அப்பதவிக்கும் செய்யும் இழுக்கு” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

உடனடி செய்திகள்