15-வது பிரதமராக பொறுப்பேற்றார் நரேந்திர மோடி!

15-வது பிரதமராக பொறுப்பேற்றார் நரேந்திர மோடி!

நாட்டின் 15வது பிரமராக நரேந்திர மோடி பதவியேற்றார். ஜனாதிபதி மாளிகையில் பிரணாப் முகர்ஜி மோடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மோடி பதிவியேற்பை முன்னிட்டு ஜனாதிபதி மாளிகை விழாக்காலம் பூண்டிருந்தது.எனினும் மோடி பதவியேற்ப்பை அவரின் அம்மா தன் சொந்த ஊரிலுள்ள வீட்டில் அமர்ந்து டி வியில் கண்டு களித்தார்
Narendra_Modi mother
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தனி மெஜாரிட்டி பெற்ற பா.ஜனதா கட்சியின் எம்.பி.க்கள் கூட்டத்தில் நரேந்திர மோடி பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து பிரதமர் பதவியேற்ற நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர். தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன், பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் மத்திய இணையமைச்சர்களாக பதவியேற்றனர். மத்திய அமைச்சர்களாக 23 பேரும், மத்திய இணையமைச்சர்களாக 22 பேரும் என மொத்தம் 45 பேர் பதவியேற்றனர்.

இந்த பதவியேற்பு விழாவுக்க வந்த சோனியா அத்வானியை சந்தித்து புதிய அரசுக்க வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் திரை நட்சத்திரங்கள் சல்மான்கான், விவேக் ஓப்ராய் உள்ளிட்டோரும் ஜனாதிபதி மாளிகைக்கு வந்தனர். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், பிரதீபா பாட்டீல் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். முன்னாள் பிரதமர் தேவகவுடா, முன்னாள் மக்களவைத் தலைவர் மீரா குமார் உள்ளிட்டடோரும் பங்கேற்றுள்ளனர்.

மோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இன்று டெல்லி வந்து சேர்ந்தனர். இவர்கள் தவிர உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முக்கிய பிரமுகர்கள் பலரும் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள வந்தனர். பதவியேற்பு விழா நடைபெறும் ஜனாதிபதி மாளிகை வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

மோடி தலைமையிலான அமைச்சரவையில், சுஷ்மா ஸ்வராஜ், மேனகா காந்தி, உமாபாரதி, நஜ்மா ஹெப்துல்லா, நிர்மலா சீதாராமன், ஸ்மிரிதி இரானி, ஹர்சிம்ரத் கவுர் பாதல் ஆகிய 7 பெண்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இதற்கிடையில் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பு விழாவினை அவரது தாயார் ஹீரா பென் தொலைக்காட்சியில் கண்டு மகிழ்ந்தார். நரேந்திர மோடியின் 92 வயது தாயார் ஹீராபென், தமது மற்றொரு மகனான பங்கஜ் மோடியுடன் அகமதாபாத் நகரில் வசித்து வருகிறார். அந்த வீடில் இருந்தபடியே தனது மகன் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றதை கண்டு ஆனந்த கண்ணீர் வடித்தார்.அப்போது, ஹீரா பென்னின் மகிழ்ச்சியை பதிவு செய்ய ஏராளமான புகைப்பட கலைஞர்கள், கேமராமேன்கள் அறையில் குவிந்திருந்தனர். அவர்களிடம் பேசிய மோடியின் தாயார், தமது மகன் நாட்டை முன்னேற்றப் பாதைக்கு அழைத்து செல்வார் என்று உற்சாகம் பொங்க தெரிவித்தார்.

Related Posts