வீடியோகான் வழங்கும் நிறைய உபயோகங்களை கொண்ட அற்புத டிவி ரெடி!
எல்லா கைப்பேசிகளும் ஸ்மார்ட் ஃபோன் என்று வந்த பிறகு சாதாரண ஃபோன்களின் மவுசு அழிந்தே விட்டது என கூறலாம். இப்போதைய ட்ரென்ட் சாதாரண டிவிகள் என்று இருந்த ஒன்று கொஞ்சம் கொஞ்சமாக பிளாஸ்மா / எல் சி டி / எல் ஈ டி என்று மாறினாலும் அடுத்த கட்டமான ஸ்மார்ட் டிவி வகைகளூக்கு மாறி கொண்டிருக்கிறது டெக்னாலஜி இந்த ஸ்மார்ட் டிவிகளின் குறைந்தபட்ச விலை 1 லட்சத்திற்க்கு மேல் இருந்தது .

இது வரை ஸ்மார்ட் டிவிகள் ஆன்ட்ராயிட் என்னும் மென் பொருளை பயன்படுத்தி மொபைல் பயன்பாட்டை இங்கு சின்க் செய்து உபயோகிக்கும் மாதிரி செய்தாலும் அது ஒரு பெர்சனல் டச்சாகவே பலருக்கு பயன்பட்டது. இந்தியா வின் வீடியோகான் முதன் முதலாக இந்தியாவில் ஸ்மார்ட் டிவிகளை வெறும் 32 ஆயிரம் முதல் விற்க தொடங்க போகிற்து. அது மட்டுமல்ல இந்த ஸ்மார்ட் டிவி வகைகள் மைக்ரோசாஃப்ட் வின்டோஸ் 10 சாஃப்ட்வேர்களை கொன்டு தயாரிக்கப்பட்ட ஒன்று.
இதன் மூலம் உலகின் அதிகமாக உபயோகிக்கும் வின்டோஸ் பயனீட்டாளர்கள் மற்றும் பிஸினஸ் அப்ளிகேஷன்கள் என நிறைய உபயோகங்களை கொண்ட அற்புத டிவி ஒன்று. ஹையா, யோ..இனிமே வீட்டிலே பவர் பாயின்ட்டுக் கும் பன்டல் சீரியலை பார்க்க சன்டை வரப்போகுதுங்கோ
Microsoft’s Windows TV launched in India by Videocon with MS Office


