விம்பிள்டன் வீராங்கனை சானியாவுக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து!

விம்பிள்டன் வீராங்கனை சானியாவுக்கு ஜனாதிபதி, பிரதமர்  வாழ்த்து!

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் இரட்டையர் பிரிவு இறுதி போட்டியில் சானியா-ஹிங்கிஸ் ஜோடி, ரஷ்யாவின் மகரோவா-வெஸ்னினா ஜோடியை சந்தித்தது. இதில் விளையாடிய சானியா-ஹிங்கிஸ் ஜோடி 5-7, 7-6, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினர்.
sania-hingis-
இது குறித்து சானியா மிர்சா செய்தியாளர்களிடம்,”விம்பிள்டன் இரட்டையரில் பட்டம் வென்றதை என்னால் நம்பவே முடியவில்லை. இது மிகவும் வியப்பாக உள்ளது. இதற்காக பல வருடங்களாக கடினமாக பயிற்சி எடுத்து விளையாடி வருகிறேன். எனது வெற்றி மற்ற பெண்களுக்கும் வாழ்வில் சிறந்த இலக்கை எட்ட ஊக்கமாக அமையும் என நம்புகிறேன்” என்று கூறினார்.

கிராண்ட்சிலாம் இரட்டையர் பிரிவில் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனையான சானியா மிர்சாவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்த சாதனையை படைத்த முதல் வீராங்கனையான சானியாவை மனமார வாழ்த்துவதாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். இதேபோல், “மிக சிறப்பான வெற்றியை பெற்ற உங்களால் நாடு பெருமை அடைகிறது” என்று பிரதமர் மோடி ட்விட்டர் மூலம் சானியாவை வாழ்த்தி உள்ளார்.

Related Posts