32°C
விளம்பரம்
Advertisement

விதண்டாவாதத்தால் அதி விரைவில் அகாலமரணம்! – லேட்டஸ்ட் ரிசல்ட்!

admin Published: May 10, 2014 2 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க / Listen to News



வாதம் என்பது நம் உடலில் ஓடும் மூன்று பூதங்களில் ஒன்றான காற்றைக் குறிக்கும் சொல். மற்ற இரண்டு நீரும் வெப்பமும், காற்று இல்லாமல் எந்த உயிரினமும் வாழ முடியாது. அத்தகைய அத்தியாவசியச் சிறப்புடையது காற்று. பிடிவாதம் என்ற சொல்லையே இங்கு வாதம் எனக் குறிப்பிடுகிறோம். பெரும்பாலோனோருக்கு வாயுத்தொல்லை இருக்கும். அதனால் மிகவும் சிரமப்பட்டு வருவர். அதேபோல்தான் பிடிவாதம் என்ற குணமும் வாழ்க்கையில் பல சிக்கல்களை உண்டாக்கும்.அதிலும் மற்றவர்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ளாமல் தனது கருத்தே சரியென வலியுறுத்தி, அதை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற மனநிலைதான் பிடிவாதம். முதுமொழி ஒன்று உண்டு. “வாதத்துக்கு மருந்து உண்டு; பிடிவாத்த்துக்கு மருந்து இல்லை” என்று, “பிடித்த முயலுக்கு மூன்றே கால்” என்று மொழியையும் பிடிவாதம் தொடர்பாய் கிராமப்புறங்களில் கூறுவர்.
arguingment avoid 1
தனது எண்ணம், பேச்சு, செயல் எல்லாவற்றையுமே எவ்வித மாற்றுக் கருத்தும் கூறாமல் மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென கட்டாயப்ப படுத்துவர். இதற்கு அவர்களது சிறு வயது முதலேயான பழக்கம், குடும்பத்தில் அவரது வருமானம் ஆகியவை காரணமாகும். சில சமயங்களில் பிடிவாதம் பிடிப்பதால், வெற்றி நிலையை அடையலாம். ஆனால், சுற்றியிருப்பவர்கள் மத்தியில் இவருக்கு கெட்ட பெயர் உண்டாகும். இருந்தாலும் தனது தவறை ஏற்காமல், தன் செயலுக்கு நியாயமான காரணங்களைத் தேடிக் கூறுவர்.இப்படி வாழ்க்கைத்துணை, நண்பர்கள், உறவினர்கள் போன்றோருடன் தொடர்ந்து வாதங்களில் ஈடுபடுவது நடுத்தர வயதிலேயே மரணத்தை ஏற்படுத்தும் ஆபத்தை அதிகரிக்கும் என்று டென்மார்க் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக ஆண்கள் மற்றும் வேலையில்லாதோர் இத்தகைய பாதிப்புகளை விரைவில் அடைவார்கள் என்று தொற்றுநோய் மற்றும் சமூக சுகாதார இதழில் வெளியிட்டுள்ள தங்களின் கட்டுரையில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். நெருங்கிய குடும்ப உறவுகளினால் பெறும் கவலைகள், கோரிக்கைகள் போன்றவையும் அதிகளவு மரண ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவையாக இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரு தனி நபரின் ஆளுமை மற்றும் மன அழுத்தத்தை சமாளிக்கும் திறன் போன்றவையும் இந்தக் கண்டுபிடிப்புகளில் முக்கிய பங்கை வகிக்கின்றன. கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் குழு தொடர்ந்து மேற்கொள்ளப்படும் வாதங்கள் ஆண் அல்லது பெண்ணின் அகால மரண வாய்ப்பை சாதாரணமானதை விட இரண்டு அல்லது மூன்று முறை அதிகரிக்கின்றது என்று குறிப்பிடுகின்றது. இருப்பினும் இதற்கான காரணங்களை அவர்களால் தெளிவாக விளக்க முடியவில்லை.

இதற்கு முன்னால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இத்தகைய வாதங்களை மேற்கொள்வோர் இதயநோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் ஆபத்துக்கு உள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் சிறந்த சமூக சூழ்நிலைகளும், நண்பர்களின் பரந்த வலைப்பின்னலும் ஒருவரின் சுகாதாரத்தில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், இத்தகைய சூழ்நிலைகளைக் கையாள்வதில் ஒருவரின் ஆளுமைத்தன்மையும் முக்கிய பங்கு வகிக்கும் என்பதுவும் ஆய்வுகளின்மூலம் தெரிவிக்கப்பட்டன.
Words Hurt
ஆனால், தற்போதைய சூழ்நிலையில் அழுத்தம் குறித்த உடலியல் விளைவுகளான உயர் ரத்த அழுத்தம், அதிகரிக்கும் இதய நோய் ஆபத்து போன்றவை மரண ஆபத்தை அதிகரிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்படுகின்றது. உடலில் கார்டிசோலின் அளவு அதிகரிப்பது ஆண்களுக்கு பாதகமான சுகாதார விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் டென்மார்க் ஆய்வாளர்களின் அறிக்கை குறிப்பிடுகின்றது.

உடனடி செய்திகள்