வருமான வரி வரம்பு ரூ.3இலட்சமாக உயரும்! மத்திய அரசு முடிவு
தற்போது நடைமுறையிலுள்ள வருமானவரி விலக்குக்கான உச்சவரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது உள்ள ரூ.2 லட்சம் என்ற வருமான வரி உச்சவரம்பை உயர்த்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாகவும் நிதித்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடுத்தர மக்களின் பெரும்பானவர்கள் வருமான வரி செலுத்துவதை தேவை இல்லாத சுமையாக கருதுகிறார்கள். அதுவும் பணியில் இருப்பவர்கள் வருமான வரி கணக்கு காட்டுவதை விரும்புவ தில்லை. இதை உணர்ந்துள்ள நரேந்திர மோடி நடுத்தர மக்களின் வருமான வரி உச்ச வரம்பு விலக்கை கையில் எடுக்க திட்டமிட்டுள்ளார். தற்போது வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ. 2 லட்சமாக உள்ளது. இந்த உச்சவரம்பை 3 லட்சம் ரூபாயாக உயர்த்த மோடி திட்டமிட்டு வருமானவரி உச்சவரம்பை உயர்துவதோடு மட்டுமல்லாது பல நிதிச்சலுகைகளும் அறிவிக்க அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் வீட்டுக்கடன் மீதான வரிச்சலுகை வரம்பை உயர்த்தவும் மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதே போல மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் பரிமியம் மீதான வரிச்சலுகை வரம்பும் உயர்த்தபட வாய்ப்புள்ளதாக நிதித்துறை வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. தமது அரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட்டிலேயே அனைத்து தரப்பினரையும் கவரும் அம்சங்கள் பலவும் இடம்பெற நரேந்திர மோடி முடிவு செய்துள்ளதாக அந்த தகவல்கள் தெரிவித்துள்ளன.


