‘ராஜா மந்திரி’ – லேட்டஸ்ட் ஆல்பம்
காளி வெங்கட் – கலையரசன் இணைந்து நடித்தப் படம் ‘ராஜா மந்திரி’. மேலும், பாலசரவணன், நாடோடிகள் கோபால், சரவணா சக்தி, காயல் பெரேரா, சுப்பர் குட் சுப்பிரமணி, வைஷாலி, ரவி, ராஜாபாண்டி, ஆனந்தி ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.அறிமுக இயக்குநர் உஷா கிருஷ்ணன் இப்படத்தை இயக்கியிருக்கிறாறார். இவர் சுசீந்திரனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
இப்படம் பற்றிக் கேட்ட போது இயக்குநர், “’ராஜா மந்திரி’ படத்தின் டைட்டிலே, அதன் கதையின் களத்தை குறிப்பிடுவதாக அமைந்திருக்கிறது. அண்ணன் தம்பி உறவு ஒருபக்கமும், அவர்களுக்கு உண்டாகும் காதலும், மனதைத் தொடும் சென்டிமெண்ட் அனுபவங்களுமே கதை. படம் பார்க்கும் அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்கக் கூடிய ஒரு முழு பொழுதுபோக்கு அம்சமுள்ள படமாக அமைந்திருப்பதை, அதன் விளம்பர காட்சிகளைப் பார்த்தாலே புரியும். காதலும், அதன் கலாட்டாகளும் கலந்து இருந்தாலும், அண்ணன் தம்பி உறவுக்குள் இருக்கும் அற்புதமான உணர்வுகளுக்கும், சென்டிமெண்ட்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது தனது கனவு தேவதையை நினைத்து, உற்சாகமாகி காளி வெங்கட் பாடும் பாடலாக ‘எதிர்த்த வீட்டு காலிஃப்ளவரே’ பாடம் அமைந்திருக்கிறது. ஜஸ்டின் பிரபாகரின் அருமையான இசையில், ஏ.சி.எஸ். ரவிசந்திரன் இப்பாடலைப் பாடியிருக்கிறார்.
’எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட்’ என்ற பேனரில் வி.மதியழகன் மற்றும் ஆர். ரம்யா ஆகிய இருவரும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இவர்களோடு கண்களைக் கொள்ளை கொள்ளும் அழகியலான ஒளிப்பதிவுக்குப் பெயர் பெற்ற பிஜி முத்தையா தனது பிஜி மீடியா வொர்க்ஸ் நிறுவனம் மூலம் இணைதயாரிப்பாளராக களமிறங்கி இருக்கிறார். ‘ராஜா மந்திரி’ படத்தை, அவ்ரா சினிமாஸ் வருகிற ஏப்ரல் மாதத்தில் உலகெங்கும் திரையிடுகிறது” என்றார்








