10 முடித்தவர்களுக்கு கிழக்கு கடற்கரை இரயில்வேயில் பணி வாய்ப்பு!
ஒரிசா மாநிலம் புவனேஸ்வரில் செயல்பட்டு வரும் கிழக்கு கடற்கரை இரயில்வேயில் காலியாக உள்ள குரூப்-டி பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 1626
பணி – பணிவாரியான காலியிடங்கள் விவரம்:
பணி: Trackman
காலியிடங்கள்: 909. இதில் 325 இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கு ஒதுக்கப்பட்டுளளது.
பணி: Token Porter
காலியிடங்கள்: 161
பணி: Safaiwala/Hospital Attendant
காலியிடங்கள்: 23
பணி: Helper-II
காலியிடங்கள்: 159
கல்வித்தகுதி: 10 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.5200-20200
வயது வரம்பு: 01.01.2014 தேதிப்படி 33-க்குள் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை Indian Postal Order (IPO) ஆக Asst.Personnel Officer (Recruitment), East Coast Railway, Bhubaneswar என்ற பெயருக்கு எடுக்க வேண்டும்.தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பெண்கள், முன்னாள் இராணுவத்தினர், சிறுபான்மையினர் மற்றும் ஆண்டு வருமானம் ரூ.50,000-க்கும் குறைவாக உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளோர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபுபவர்களுக்கு உடல்திறன் தேர்வு நடத்தப்படும். இறுதியாக மருத்துவ பரிசோதனை நடத்தப்படும். அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றவர்கள் அடங்கிய மெரிட் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.rrcbbs.org.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிற்க்கம் செய்து பயன்படுத்தவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: “The Assistant Personnel Officer (Recruitment), East Cost Railway Head Quarters, Office of the Chairman, Railway Recruitment Cell, 2nd Floor, South Block, Rail Sadan, Chandrasekarpur, Bhubaneshwar, Odisha 751017.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 11.11.2013
மேலும் தேர்வுகள் உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய http://www.rrcbbs.org.in/என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.


