மோதிரம மூலம் கணனியை இயக்கும் தொழில்நுட்பம்! வீடியோ
முன்னெல்லாம் ஆண்டுதோறும் தொழில்நுட்பத்தில் அடைந்து வளர்ந்து வந்த வளர்ச்சியை இப்போது நாள் தோறும் அடைந்து கொண்டிருக்கிறோம் .அதிலும் குறிப்பாக இப்போதெல்லாம் தொழில்நுட்பத்திற்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறோம் என்றே சொல்லலாம்.எங்கும் தொழில்நுட்பம், எதிலும் தொழில்நுட்பம் என்ற நிலைக்கு வந்துவிட்டோம்.ஒவ்வொரு நிறுவனமும் மக்களை கவர்வதற்காக எண்ணற்ற வசதிகளை புகுத்திக் கொண்டே உள்ள நிலையில் மிகப் பெரிய உலகத்தையே சின்ன கைபேசியில் அடக்கி விடலாம் என்ற நிலை வந்துவிட்டது.

இந்நிலையில் வயர்லெஸ் தொழில்நுட்பமான புளூடூத் மூலம் உங்கள் உள்ளங்கையினை தொடுகை இடைமுகமாக(touch interface) மாற்றக்கூடிய சாதனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.Fin Bluetooth Ring எனப்படும் இச்சாதனத்தினை விரலில் அணிந்து கொண்டு ஸ்மார்ட் கைப்பேசிகள், டேப்லட்கள், கணினிகள், கூகுள் கிளாஸ் போன்றவற்றினை இயக்க முடிவதுடன் இத்தொழில்நுட்பத்தினை கார்களிலும் பயன்படுத்தக் கூடியதாக காணப்படுகின்றது.இச்சாதனத்தினை RHL Vision Technologies எனும் நிறுவனம் கடந்த 2 வருட கடின உழைப்பின் மூலம் உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன் வீடியோ லிங்க்::http://www.youtube.com/watch?v=iZ6PVBvQf-g


