மரம் வளர்ப்பதை ஊக்கப்படுத்த மம்முட்டியின் புதிய சவால்!
ஏ.எல்.எஸ்.’ என்று அழைக்கப்படும் நரம்பு தொடர்பான நோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடை திரட்டவும், உலக அளவில் ‘ஐஸ் பக்கெட்’ சவால் விடப்பட்டுள்ளது.அது போல் தற்போது இந்தியாவில் “ரைஸ் பக்கெட்” சவால் என்றொரு வித்தியாசமான சவால் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் பல ஏழை மக்கள் உணவுக்காக தடுமாறும் நிலையை தடுக்க முடியும் என்றும் இதையொட்டி அருகில் இருக்கும் உணவு தேவைப்படும் ஒருவருக்கு ஒரு பக்கெட் அரிசியோ அல்லது 100 ரூபாய் பணத்தையோ தந்து இதனை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் உங்களது நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையெல்லாம் முன் உதாரணமாக கொண்டு பிரபல மலையாள நடிகர் மம்முட்டி ‘மை ட்ரீ சேலஞ்ச்’ என்ற புதிய சவாலை அறிவித்துள்ளார். அதன்படி, ஒரு மரக்கன்றை நட்டு அதை பராமரிக்க வேண்டும். உலகம் வெப்பமயமாகலை தடுப்பதற்காகவும் மரம் வளர்த்து பூமியை காக்க விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அவர் இதை செயல்படுத்துவதாக அறிவித்துள்ளார். தன் வீட்டு தோட்டத்தில் மரக்கன்று நட்டு அதற்கு தண்ணீர் ஊற்றுவதுபோல வீடியோ எடுத்து பேஸ் புக்கில் நடிகர் மம்முட்டி வெளியிட்டுள்ளார். www.facebook.com/My Tree challenge. என்ற முகவரியில் இது வெளியாகி உள்ளது.
நான் ஒரு மரக்கன்று நட்டு உள்ளேன். உங்களால் இது முடியுமா? என்று நடிகர் மம்முட்டி சவால் விட்டு இந்த திட்டத்திற்கு ரசிகர்களுக்கு அழைத்து விடுத்துள்ளார். மேலும் இந்தி நடிகர் ஷாருக்கான், தமிழ் நடிகர் விஜய், சூர்யா போன்றோருக்கும் மம்முட்டி இதை அவர்களது ரசிகர்கள் மூலம் செயல்படுத்தும்படி சவாலுடன் கூடிய அழைப்பு விடுத்துள்ளார். ‘‘தலையில் ஐஸ் கட்டி தண்ணீர் கொட்ட வேண்டாம். மரக்கன்றுக்கு தண்ணீர் ஊற்றுங்கள்’’ என்ற கருத்துடன் மம்முட்டி வெளியிட்டுள்ள மரக்கன்று நடும் வீடியோவுக்கு அவரது பேஸ் புக்கில் ஆதரவு அதிகரித்து வருகிறது


