32°C
விளம்பரம்
Advertisement

‘மணல் அள்ள 100% தடை தவறு” -சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.சதாசிவம்

admin சேலம் Published: October 19, 2013 2 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




“கடல் மற்றும் ஆற்றுப்படுகைகளில் மணல் அள்ளுவதற்கு 100 சதவீதம் தடை விதித்தது தவறு” என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.சதாசிவம் கருத்து தெரிவித்து இருக்கிறார்.
19 justice sathasivam
நாடு முழுவதும் கடலோரங்களிலும், ஆற்றுப்படுகைகளிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் அனுமதி பெறாமல் மணல் அள்ளுவதற்கு முழுமையான தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பரபரப்பான தீர்ப்பு வழங்கியது.இந்த நிலையில், நேற்று டெல்லியில் நடைபெற்ற பசுமை தீர்ப்பாய நீதிமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவில், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.சதாசிவம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், கடல் மற்றும் ஆற்றுப்பகுதியில் மணல் அள்ளுவதற்கு 100 சதவீதம் தடை விதிக்கப்பட்டது தவறு என்று கூறினார்.

‘‘சில கோர்ட்டுகள், சில தீர்ப்பாயங்கள் ஆறுகளில் மணல் அள்ளுவதற்கு முழுயை£ன 100 சதவீதம் தடை விதித்து இருப்பது வருந்தத்தக்கது. இது தவறு என்று நான் கூறுகிறேன்’’ என்று, தலைமை நீதிபதி சதாசிவம் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசுகையில் தனது வீடும் நிலமும் தமிழ்நாட்டில் காவிரி கரையில் இருப்பதை குறிப்பிட்டு, ‘‘ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை ஆற்றில் தண்ணீரே இருக்காது. மணல்தான் இருக்கும். குறைந்த பட்சம் 3 அடி முதல் 5 அடி வரை அந்த மண்ணை அகற்றாவிட்டால், தண்ணீர் வரும்போது வெள்ளம் வீணாக கடலுக்குத்தான் போய்ச் சேரும்’’ என்றும், நீதிபதி சதாசிவம் குறிப்பிட்டார்.

அவர் மேலும் பேசுகையில், ‘‘சுற்றுச்சூழல் பாதுகாப்பும் வளர்ச்சியும் சம நிலையில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும், அதுபோன்ற சூழ்நிலையில் சிறிய அளவிலான மக்கள் நலன்கள் பெரிய அளவிலான மக்கள் நலன்களுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும்’’ என்றும் குறிப்பிட்டார்.விழாவில் பங்கேற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஆர்.எம்.லோதா பேசுகையில், சமுதாயத்தின் சில பிரிவினர் கருதுவது போல் சுற்றுச்சூழல் கட்டுப்பாடு நடவடிக்கைகள் வர்த்தகத்துக்கு எதிரானது அல்ல என்று குறிப்பிட்டார்.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்