மகளிர் உலகக் கோப்பை ; இங்கிலாந்து அணியை வென்றது இந்திய அணி! வென்றது.

மகளிர் உலகக் கோப்பை ; இங்கிலாந்து அணியை வென்றது இந்திய அணி! வென்றது.

11-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும். முதல் நாளான நேற்று இங்கிலாந்தின் டெர்பி நகரில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி, பூனம் ராவத், ஸ்மிர்தி மந்தனா மற்றும் கேப்டன் மிதாலி ராஜ் ஆகியோரின் அரை சதங்களின் உதவியால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் குவித்தது. ராவத் 86 ரன்களும், ஸ்மிர்தி 90 ரன்களும் எடுத்தனர். மிதாலி ராஜ் 71 ரன்கள் குவித்தார். இதையடுத்து 282 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு, இந்திய அணி சிறப்பான பந்துவீச்சு மூலம் நெருக்கடி கொடுத்தது.

ஃப்ரான் வில்சன் தவிர மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி 47.3 ஓவர்களில் 246 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதன்மூலம் இந்திய மகளிர் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்திய அணி தரப்பில் தீப்தி ஷர்மா 3 விக்கெட்டுகளும், ஷிகா பாண்டே 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.இங்கிலாந்துக்கு எதிராக 2012-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியா பெற்ற முதல் வெற்றி இதுவாகும். இந்திய தரப்பில் தீப்தி ஷர்மா 3 விக்கெட்டுகளும், ஷிகா பான்டே 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். இந்திய அணி தனது 2-வது லீக்கில் வருகிற 29-ந்தேதி வெஸ்ட் இண்டீசுடன் மோதுகிறது.