32°C
விளம்பரம்
Advertisement

புலிகள் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

admin சேலம் Published: May 15, 2014 1 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




கடந்த1991ம்ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கைய சேர்ந்த விடுதலைப்புலிகள் அமைப்பால் கொல்லப்பட்டார். இதையடுத்து அந்த அமைப்பிற்கு மத்திய அரசு தடைவிதித்தது. தற்போது அந்த தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து இதற்கான ஆணை இன்று அரசால் பிறப்பிக்கப்பட்டது.
ltte logo
தனி ஈழம் கேட்டு இலங்கை அரசுக்கு எதிராக தொடர்ந்து ஆயுத போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலைப்புலிகள் இயக்கம் 2009ல் நடந்த இறுதிக்கட்ட போரில் ஒடுக்கப்பட்டது. 1991ம் ஆண்டு ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, இந்தியாவில் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. பின்னர் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கும் ஒருமுறை இந்த தடையை மத்திய அரசு நீட்டிப்பு செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது மே 14-ம் தேதியில் இருந்து மேலும் 5 ஆண்டுகளுக்கு விடுதலைப் புலிகள் மீதான தடை நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்