புதிய சட்டங்கள் குறித்து மக்கள் கருத்து: மத்திய அரசு யோசனை!

புதிய சட்டங்கள் குறித்து மக்கள் கருத்து: மத்திய அரசு யோசனை!

புதிய சட்டங்களை இயற்றுவதற்கு முன்பாக பொதுமக்கள் கருத்தை அறியும் திட்டம் குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.புதிதாக தொடங்கப்பட்டு டெல்லியில் ஆட்சியை கைப்பற்றியுள்ள கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, புதிய சட்டங்கள் தொடர்பாக மக்கள் கருத்தை அறிவது அவசியம் என்ற கொள்கையை வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
jan 8 - public_opinion_
மத்திய அரசின் அமைச்சகங்கள் புதிய சட்டங்களை இயற்றுவதாக இருந்தால், அந்த சட்டம் குறித்து பொதுமக்களின் கருத்துகளை அறிந்து கொள்வதை சட்டபூர்வமாக்கும் செயல் திட்டம் பற்றி மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. ஆனால், இதில் இறுதி முடிவு எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

புதிய திட்டத்தை அமல்படுத்த முடிவு எடுக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட சட்டம் குறித்து விவாதிப்பதற்காக அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறையின் செயலாளர்களின் கூட்டத்தை கூட்டுவது கட்டாயமாக்கப்படும். அதேபோல் சட்ட மசோதாவின் வரைவு நகலை தயாரிப்பதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் அது குறித்து பொதுமக்களின் கருத்தை அறிந்துகொள்வதும் கட்டாயமாக்கப்படும்.

புதிதாக நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ள உத்தேச சட்டம் குறித்து அதன் வரைவு நகல் அல்லது விளக்க அறிக்கையை வெளியிட்டு பொதுமக்கள், நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் போன்றவர்களுடைய கருத்துகளை கேட்டு அறிந்து இறுதி முடிவு எடுக்கலாம்.

அதே நேரத்தில், அவசர காலங்களில் மக்களின் கருத்துகளை கேட்டு அறியாமலேயே நேரடியாக மந்திரிசபை செயலாளருக்கு அந்த சட்ட மசோதாவை அனுப்பி ஒப்புதல் கோரலாம் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.சமீபத்தில் பெண்கள்-குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகங்கள் தங்களுடைய வரைவு சட்ட மசோதா குறித்து மக்களின் கருத்தை அறிந்துகொள்வதற்காக இணைய தளத்தில் வெளியிட்டு இருந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.

Govt mulls proposal to seek public view before framing laws
*************************************************************
Apparently taking a leaf out of Aam Aadmi Party’s strategy, the government is mulling a proposal to make it mandatory for Union ministries to elicit public opinion before framing legislations.

Related Posts