பாரீஸ் நகரில் ஐ எஸ் நடத்திய 100 -க்கும் அதிகமானோர் பலி
பாரீஸ் நகரின் பல்வேறு இடங்களில் ஐ எஸ் தீவிரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதலில் குறைந்தது 140 பேர் பலியாகியிருப்பதாக அஞ்சப்படுகிறது.

கிழக்கு பாரீசில் உள்ள படாக்லன் கான்சர்ட் ஹாலில் 15 பேர் பலியாகியிருப்பதாகவும், பிணையக்கைதிகளாக சுமார் 100 பேர் தீவிரவாதிகளால் பிடித்து வைக்கப்பட்டிருப்பதாகவும் போலீசார் முன்னதாக தெரிவித்துள்ளனர்.
இதேபோல் பாரிஸ் நகரின் மையப்பகுதியில் உள்ள உணவு விடுதி, ப்ரான்ஸ்-ஜெர்மனி இடையேயான கால்பந்து போட்டி நடந்து கொண்டிருந்த வடக்கு பாரிஸ் உட்பட நகரின் பல்வேறு இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டு வெடிப்பு காரணமாக குறைந்தது 100 பேர் பலியாகியிருப்பதாக கூறப்படுகிறது.
குண்டு வெடிப்பு குறித்து தகவலறிந்ததும் பிரான்ஸ் அதிபர் ஹாலந்து மற்றும் உள்துறை மந்திரி ஆகியோர் வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதனால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


