பாகிஸ்தானில் இந்துக்களுடன் முஸ்லீம்கள் இணைந்து கொண்டாடிய தீபாவளி!

பாகிஸ்தானில் இந்துக்களுடன் முஸ்லீம்கள் இணைந்து கொண்டாடிய தீபாவளி!

பாகிஸ்தானில் இந்துக்கள் மைனாரிட்டி ஆக உள்ளனர்.அவர்கள் சிந்து மாகாணத்தில் பெருமளவில் வசிக்கின்றனர். அங்கு அவர்கள் மீது சமூக விரோதிகளும், தீவிரவாதிகளும் அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வருகின்றனராம். மேலும் அங்குள்ள இந்து கோவில்கள் தீயிட்டு எரிக்கப்படுகின்றன.சாமி சிலைகள் உடைக்கப்படுகின்றன. அதனால் தீவிர வாதிகளின் மிரட்டலுக்கு பயந்து ஆண்டு தோறும் பாகிஸ்தானில் இருந்து 5 ஆயிரம் இந்துக்கள் வெளியேறி வருகின்றனர். இந்த தகவலை ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ் பிரிவு) எம்.பி. ரமேஷ்குமார் வாங்வானி பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
diwali muslim nov 17
இந்நிலையில் பாகிஸ்தானின் கைபர்-பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவரில் கடந்த சனிக்கிழமை இரவு தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. அங்குள்ள புகழ்பெற்ற மைதானம் ஒன்றில் நடைபெற்ற இந்த பண்டிகை நிகழ்ச்சியை பாகிஸ்தானில் உள்ள இந்து மத உரிமைகள் அமைப்பின் தலைவர் ஹரூன் சராப் தியால் ஏற்பாடு செய்து இருந்தார்.

நிகழ்ச்சியில் மகாண அமைச்சர் ஆன்சியா சேப் தஹிர்கேலி தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். இதில், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கிய மதத்தை சேரந்த மக்கள் இந்துக்களுடன் இணைந்து தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய மத அலுவல்களுக்கான அமைச்சர் குரி ரோகுல்லா மதானி, ”பல்வேறு மத நம்பிக்கைகள் கொண்ட மக்கள் இணைந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது பாகிஸ்தான் மக்களிடையே உள்ள சகோதரத்து வத்தையும் நல்லிணக்கத்தையும் பிரதிபலிப்பதாக உள்ளது. நமது நாட்டில் சிறுபான்மையினர் வாழ்வதற்கும் தங்களின் மத தொடர்பான நிகழ்ச்சிகளை கொண்டாடுவதற்கும் முழு சுதந்திரம் உள்ளது” என்றார்.