பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு தமிழக அரசின் அண்ணா விருது!

பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு தமிழக அரசின் அண்ணா விருது!

தே மு தி க .வின் அவைத் தலைவராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் அண்மையில் அரசியலில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்த போதே, அ.தி.மு.க.வில் சேரப் போவதாக மீடியாவட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது.தற்போது இதனை உறுதி செய்யும் வகையில் பண்ருட்டியாருககு, தமிழக அரசு ‘பேரறிஞர் அண்ணா’ விருதை இன்று அறிவித்துள்ளது.
jan 13  - panroti ramu
தமிழுக்கு தொண்டாற்றி பெருமை சேர்த்த தமிழ் அறிஞர்களுக்கு தமிழக அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு விடுத்துள்ள அறிவிப்பில், ”திருவள்ளுவர் விருதுக்கு கவிஞர் யூசியும் (தைவான்), தந்தை பெரியார் விருதுக்கு சுலோச்சனா சம்பத்தும், அண்ணல் அம்பேத்கர் விருதுக்கு பேராயரும், முனைவருமான எம்.பிரகாசும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.அதே போல், பேரறிஞர் அண்ணா விருது பண்ருட்டி ச.ராமச்சந்திரனுக்கும், பெருந்தலைவர் காமராசர் விருது கி.அய்யாறு வண்டையாருக்கும், மகாகவி பாரதியார் விருது முனைவர் கு.ஞானசம்பந்தனுக்கும் வழங்கப்படுகிறது” எனக் கூறப்பட்டுள்ளது.

சமீபததில் தனது எம்.எல்.ஏ பதவியையும் திடீரென ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்திய பண்ருட்டி ராமச்சந்திரன். விஜயகாந்த கட்சியின் அவைத் தலைவர் பதவியில் இருந்தும் விலகினார். பண்ருட்டியாரின் இந்த முடிவால் தே.மு.தி.க.வினர் பெரிதும் அதிர்ச்சி அடைந்தனர்.

அப்போது தன உடல் நலத்தை கருத்தில் கொண்டு முழு அரசியலில் இருந்தே ஓய்வு பெறுவதாக பண்ருட்டி அறிவித்தாலும், அவர் விரைவில் அ.தி.மு.க.வில் சேரப் போவதாக மீடியா வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது.தற்போது இதனை உறுதி செய்யும் வகையில் பண்டிருட்டி ராமச்சந்திரனுக்கு, பேரறிஞர் அண்ணா விருதை தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. இதையொட்டி கூடிய விரைவில் பண்ருட்டியார், அ.தி.மு.க.வில் ஐக்கியமாகலாம் என்றும அங்கும் அவருக்கு அவைத்தலைவர் பதவி வழங்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.