நாடக கலைஞர்களின் வாழ்க்கையை காட்டும் ‘காவியத்தலைவன்’ ஆல்பம்

நாடக கலைஞர்களின் வாழ்க்கையை காட்டும் ‘காவியத்தலைவன்’ ஆல்பம்

வெயில், அங்காடித்தெரு, அரவான் ஆகிய சிறந்த கதையம்சம் உள்ள படங்களை கொடுத்தவர், டைரக்டர் வசந்தபாலன். இவர் டைரக்டு செய்யும் புதிய படம், ‘காவியத்தலைவன்.’இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்னால், தமிழ்நாட்டில் பெரும் செல்வாக்குடன் வாழ்ந்த நாடக கலைஞர்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகும் படம் இது. படத்தில், சுதந்திர போராட்டமும் ஒரு முக்கிய பகுதியாக வைக்கப்பட்டு இருக்கும் இந்த படத்தில், சித்தார்த் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகி, வேதிகா. இன்னொரு கதாநாயகியாக ராம்கோபால்வர்மாவின் ‘சத்யா–2’ படத்தில் அறிமுகமான அனைக்கா சோட்டி நடிக்கிறார். மிக முக்கிய கதாபாத்திரத்தில், பிருதிவிராஜ் நடிக்கிறார்.இவர்களுடன் நாசர், தம்பி ராமய்யா, சிங்கம்புலி, பொன்வண்ணன், மன்சூர் அலிகான், பாபு ஆன்டனி, கரிகாலன், டி.பி.கஜேந்திரன், கிஷோர், கொட்டாச்சி, ‘அழகி’ ஜார்ஜ், குயிலி மற்றும் பலரும் நடிக்கிறார்கள்.