தோலில் இருந்து விந்தணுவை உருவாக்கிய அமெரிக்க விஞ்ஞானிகள்!
பொதுவாக கருத்தரிக்காத பெண்ணையும், ஒரு பெண்ணை கருத்தரிக்க வைக்க முடியாத ஆணையும் மலடு என்று குறிப்பிடுகிறார்கள்.திருமணம் முடித்து ஒரு சில வருடங்களுக்கு பின்பு ஒரு பெண் கருத்தரிக்கவில்லை என்றால் அந்த பெண்ணிற்கு பிரச்சினை எதுவும் இல்லாத பட்சத்தில் அப்போது தான் ஒரு ஆண் தன் மலட்டு தன்மையை உணர ஆரம்பிக்கிறான்.பெண்ணின் கருமுட்டை வளர்ச்சியடையாமல் மலட்டுத்தன்மை உண்டாவது போல, குறைவான விந்து எண்ணிக்கை மற்றும் வீரியமற்ற விந்தணுக்களால் ஒரு ஆண் தந்தையாக முடியாமல் மலட்டுத்தன்மை குறைபாடு உள்ளவர்களுக்கு கை கொடுக்கும் வகையில் விஞ்ஞானிகள் நவீன ஆய்வுகளில் ஈடுபட்டனர். அதன்படி ஆணின் தோலில் இருந்து விந்தணு உற்பத்தி செய்யும் ஆய்வு ஒன்றை அவர்கள் நீண்டகாலமாக மேற்கொண்டனர். இந்த ஆராய்ச்சியில் தற்போது முதல் வெற்றியை அடைந்திருக்கிறார்களாம்.

இந்த குறைபாட்டால் அவர்களுக்கு இல்லற வாழ்வில் ஈடுபாடு குறைவதோடு குழந்தையின்மையும் உண்டாகிறது. குடும்பத்தில் குழப்பமும் கூடுகிறது. ஆண்களுக்கு மலட்டு தன்மை வர பல காரணங்கள் இருந்தாலும் சில பல காரணங்கள் இன்னும் அதிகமான பாதிப்பை உண்டு பண்ணுகின்றன.
லேப்டாப்பை மடியில் வைத்து உபயோகிக்கும் ஆண்களுக்கு உயிரணுக்கள் எண்ணிக்கை குறைந்து குழந்தையின்மை ஏற்படும் அபாயம் அதிக அளவில் உள்ளது. மேலும் எண்டோகிரைன், வாஸ்குலர் நரம்பு, ஆண்களுக்கு விபத்தில் டெஸ்டிஸ்(விதைப்பை) காயம் (அ) அழுத்தம் ஏற்பட்டால், பொன்னுக்கு வீங்கி காரணமாக உண்டாகும் வைரஸ் தொற்று, மன அழுத்தம், பரம்பரை மற்றும் ஹார்மோன் பிரச்சனைகளே ஆண்களின் மலட்டு தன்மைக்கு காரணமாகி அவர்கள் நிம்மதியை தொலைத்து விடும்.
இதை சரிசெய்ய வாழ்க்கை முறை முக்கிய காரணமாக அமைகிறது. சீரான உடற்பயிற்சி, சூடான நீரில் தினமும் குளிக்காமல் இருத்தல், காபி, புகை மற்றும் மது பழக்கத்தை அடியோடு கை விடுதல், இறுக்கமான ஆடைகள் அணிவதை தவிர்த்தல் மிகுந்த பலன் அளிக்கும்.யோகா, தியானம் போன்ற பழக்கங்களை அனுசரித்து வந்தால் விந்துவின் வீரியமும், எண்ணிக்கையையும் அதிகரிக்கும் என்றாலும் இத்தகைய குறைபாடு உள்ளவர்களுக்கு கை கொடுக்கும் வகையில் விஞ்ஞானிகள் நவீன ஆய்வுகளில் ஈடுபட்டனர். முன்னதாக கியோபோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜப்பான் கருத்தரிப்பு மைய நிபுணர்கள் எலியின் கருவில் உள்ள ஸ்டெம்செல்களில் இருந்து தரம் வாய்ந்த திசு செல்களை ஆய்வகத்தில் வைத்து தயாரித்தனர். அவற்றை மலட்டுதன்மையுடன் இருந்த ஒரு எலியின் விரை பைக்குள் செலுத்தினர். அது இயற்கையானதை போன்று செயற்கையான விந்தணுவை உற்பத்தி செய்தது. அவற்றை எலியின் கரு முட்டையில் செலுத்தினர். இதை தொடர்ந்து உடல் நலத்துடன் கூடிய எலிக்குட்டிகள் பிறந்தன. எனவே இதே முறையை மலட்டுத்தன்மை நோயில் சிக்கி தவிக்கும் ஆண்களின் உடலில் பயன்படுத்தவும் நிபுணர்கள் முயன்று வந்தது தெரிந்ததே.
இதன் அடுத்தக் கட்டமாக ஆணின் தோலில் இருந்து விந்தணு உற்பத்தி செய்யும் ஆய்வு ஒன்றை அவர்கள் நீண்டகாலமாக மேற்கொண்டனர். இந்த ஆராய்ச்சியில் தற்போது முதல் வெற்றியை பெற்றிருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.விந்தணு குறைபாடுள்ள ஒரு ஆணின் தோலில் இருந்து, விந்தணு உருவாக்கும் முயற்சியில் முதற்கட்ட வெற்றி பெற்றுள்ளதாகவும், இதன் மூலம் குணப்படுத்த இயலாத ஆண் மலட்டுத்தன்மைக்கு தீர்வு காண வழி பிறக்கும் என்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


