துடுப்பு படகில் இலங்கை டூ தனுஷ்கோடி வந்த ஆஸ்திரேலிய பெண்

துடுப்பு படகில் இலங்கை டூ தனுஷ்கோடி வந்த ஆஸ்திரேலிய பெண்

உலக மக்களிடம் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் படகில் உலகை சுற்றி வரும் இவர் ராமேஸ்வரம்: தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை துடுப்பு படகில் பயணித்து சாதனை படைத்துள்ளார். இதற்க்காக 10 அடி நீளமுள்ள பைபர் கிளாஸ் படகை பயன்படுத்துகிறார். இதில் உட்புறம் அமைந்துள்ள 2 பெடல்களை கால்களால் மிதித்து சைக்கிள் ஓட்டுவது போன்றும், துடுப்பின் உதவியுடனும் எந்த இயந்திர உதவியும் இல்லாமல் பயன்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
lady - boat achiver
ஆஸ்திரேலியாவில் கடல் கயாக் (குறுகலான துடுப்பு படகு) பயிற்சி மையத்தின் ஆசிரியராக இருப்பவர் சான்ட்ரா ஹேலன் ராப்சன், வயது -46. இவருக்கு உலகளவில் சாதனை படைக்க வேண்டுமென ஆர்வம் இருந்தது. இதனால், கடந்த 2000ம் ஆண்டு முதல் ஜெர்மனி, ஆஸ்திரேலியா, கங்கேரி, செர்பியா, குரேஷியா, கிரீஸ், துருக்கி, சைப்ரஸ் உள்ளிட்ட பல நாட்டு கடல் பகுதியில் 6000 கி.மீ., தூரத்தை கயாக் படகில் தன்னந்தனியாக கடந்துள்ளார். இப்படி பல்வேறு நாடுகளை கடந்து அரபிக் கடல் பகுதிக்கு வந்தார். பின்னர், மும்பை, கோவா, கொச்சின் சென்று கடந்த 14.3.2013ல் மன்னார் வளைகுடா கடல் வழியாக ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வந்தடைந்தார்.

மறுநாள் அங்கிருந்து புறப்பட்டு பாக் ஜலசந்தி கடல் வழியாக வேதாரண்யம் அடைந்தார். பின்னர், இலங்கை சென்ற அவர் நேற்று காலை மன்னார் துறைமுகத்தில் இருந்து தனது படகில் புறப்பட்டு மாலை 6 மணியளவில் தனுஷ்கோடி கடற்கரையை வந்தடைந்தார். இவரை ரெட்புல் சாதனையாளர்கள் நிறுவனத்தின் நிர்வாகிகள் வரவேற்றனர். மண்டபத்தில் தங்கும் இவர், சில நாள் கழித்து படகில் மற்ற நாடுகளுக்கும் பயணித்து 2016 செப்டம்பரில் ஆஸ்திரேலியா திரும்புகிறார்.

தனது சாகச பயணம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,‘‘ஆஸ்திரேலியாவில் ஆசிரியராக பணியாற்றி வரும் எனக்கு வெளியிடங்களை சுற்றி பார்ப்பதிலும், சுற்று சூழல்களை அறிந்து கொள்வதிலும் அதிக ஆர்வம். இதன் காரணமாகவே நான் எஸ்கிமோக்கள் பயன்படுத்தும் படகை போன்ற ஒரு படகினில் இந்த உலகை வலம் வர நினைத்தேன்.அதன்படி 2000 ஆம் ஆண்டில் என் படகு பயணத்தை துவக்கினேன். கடந்த 13 வருடங்களாக நான் மேற்கொண்டு வரும் இந்த பயணத்தின் மூலம் இதுவரை சுமார் 7,000 கி.மீ. தூரம் கடலில் பயணித்துள்ளேன். இந்த அனுபவத்தின் மூலமாக இந்தியாவின் மேற்கு கடல் பகுதியில் துடுப்பு படகின் மூலம் பயணித்த முதல் பெண்மணியாக சாதனை படைக்க முடிந்தது. எனது சாதனை பயணத்தில் அடுத்ததாக சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து நாடுகளுக்கு துடுப்பு படகில் பயணம் செய்துவிட்டு வரும் 2016 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு திரும்புவேன்’’ என்றார்.

Related Posts