தினந்தோறும் ரூ. 254 கோடி சம்பாதிக்கும் சூதாட்ட ‘ராஜா’
2013ம் ஆண்டு, அமெரிக்காவை பொறுத்தவரை பங்குச்சந்தையில் பல நூறு கோடிகளை அள்ள உதவிய ஆண்டு என்று சொல்லலாம். ஆம், 1997க்கு பின், பங்குச்சந்தை சூப்பர் செழிப்பாக இருந்தது இந்த ஆண்டு தான். பங்குச்சந்தை வர்த்தகத்தில் கோடிகளை குவித்த மெகா கோடீஸ்வரர்கள் பற்றி போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள தகவல்கள் வியக்க வைக்கிறது. 2013-ம் ஆண்டின் அதிகம் சம்பாதித்த நபராக சூதாட்ட விடுதிகள் (கேசினோ) நடத்திவரும் அமெரிக்க தொழிலதிபர் அடெல்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவர் லாஸ் வேகாஸ், சீனாவின் மக்காவ் மற்றும் சிங்கப்பூரில் விதவிதமான சூதாட்ட மையங்களை தொடங்கியுள்ளார்.இங்குள்ள சூதாட்ட விளையாட்டுகளில் கலந்துகொள்ள உலகம் முழுவதும் உள்ள கோடீஸ்வரர்கள் அந்த விடுதிகளுக்கு படையெடுக்கின்றனர். இதனால், கேசினோ சூதாட்ட விடுதிகளுக்கு இந்த ஆண்டு கொள்ளை லாபம் கிடைத்துள்ளது.
இதையடுத்து கேசினோ அதிபர் ஷெல்டன் அடெல்சனின் ஒரு நாளைய வருமானம் 254 கோடி ரூபாய் என்று போர்ப்ஸ் பத்திரிக்கை கூறியுள்ளது. இச்சாதனையின் மூலம் உலகின் முன்னணி கோடீஸ்வரரான வாரன் பப்பெட்டை அடெல்சன் முந்தி விட்டார் என்று கூறப்படுகிறது.
* 2012ல் பங்குகளின் மதிப்பில் சரிந்து ஏமாற்றம் அடைந்த சக்கர்பர்க் ஆரம்பித்த பேஸ்புக் நிறுவனம் இந்தாண்டு கணிசமாக லாபம் ஈட்டியது. இந்த ஆண்டு மதிப்பு 2,600 கோடி டாலர்.அதாவது பேஸ்புக் வலைதள அதிபர் மார்க் ஸுகெர்பெர்க் இந்த ஆண்டில் ஒரு நாளைக்கு 230 கோடி வீதம் சம்பாதித்து இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
* அமேசான் ஆன்லைன் வர்த்தக வெப்சைட் ஆரம்பித்த ஜெப் பெசோஸ் வர்த்தக நிகர மதிப்பு 1,330 கோடி டாலர்.
* பங்கு சந்தையில் எப்போதும் லாபம் குவிக்கும் பிரபல கோடீஸ்வரர் வாரன் பப்பட் இந்தாண்டு பங்கு சந்தை மதிப்பு 1,330 கோடி டாலர். ஒரு நாள் பங்கு சந்தை வருமானம் 205 கோடி.
* பங்கு சந்தையில் அதிக வருமானம் ஈட்டிய பட்டியலில் கூகுள் நிறுவனர் லாரி பேஜ் 9வது இடத்தில் உள்ளார். கூகுள் பங்கு சந்தை மதிப்பு 940 கோடி டாலர்.
* பட்டியலில் பத்தாவதாக இருப்பவர் மைக்ரோசாப்ட் நிறுவன தலைவர் பில் கேட்ஸ். ஒரு நாள் பங்கு சந்தை வருமானம் 158 கோடி ரூபாய். மொத்த பங்கு சந்தை சொத்து 7410 கோடி.
Casino magnate Adelson made Rs. 254 crore per day in 2013
**************************************************************
2013 turned out to be a great year for equity investors in the US. The Dow Jones Average scaled the 16,000 peak for the first time ever. The broader S&P 500 index rose 28 per cent for the year. In fact, 2013 was the best year for US equities since 1997.


