தமிழக இடைக்கால பட்ஜெட் 2016:! -ஹை லைட்ஸ்
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தலைமை செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் தொடங்கியது. முன்னதாக அனைத்து கட்சி உறுப்பினர்கள் கூட்டத்திற்கு வந்திருந்தனர். சபாநாயகர் தனபால் பட்ஜெட் கூட்டத் தொடர் உரையாற்றும் படி நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை கேட்டு கொண்டார். அப்போது, திமுக சட்டசபை தலைவர் ஸ்டாலின், தேமுதிக சட்டமன்ற துணை தலைவர் மோகன்ராஜ், மார்க்சிஸ்ட சட்டசபை தலைவர் சவுந்திரராஜன், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோர் எழுந்து நின்று பேச முயன்றனர்.அப்போது, நிதி அமைச்சரின் அறிவிப்புக்கு முன்பு முக்கிய விவாதத்தை எடுத்து கொள்ள வேண்டுமென்று அவர்கள் சபாநாயகரிடம் கூறினர். சபாநாயகர் தனபால் நாளை விவாதத்தில் எடுத்து கொள்ளலாம் என்றார். இதற்கு, எதிர்க்கட்சிகள் அனைத்தும் இது முக்கியமான விவாதம் எனக்கூறி தொடர்ந்து வலியுறுத்தினர். பின்னர் எதிர்க்கட்சிகள் கோரிக்கையை சபாநாயகர் ஏற்காததை தொடர்ந்து வெளிநடப்பு செய்தனர்.

2016-17ம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் சமர்ப்பித்தார். இந்த பட்ஜெட் அறிக்கையில் ‘அதிமுக ஆட்சியின் சாதனைகள் என்று பட்டியலிட்டார். பின்னர் 2016-17ம் ஆண்டுக்கான திட்ட ஒதுக்கீடு சட்டசபை தேர்தலுக்கு பிறகு முடிவு செய்யப்படும் என்றாலும், இடைக்கால வரவு, செலவு திட்டத்தில் ரூ.60 ஆயிரத்து 610 கோடி உத்தேசமாக ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கட்டமைப்பு மேம்பாட்டு நிதியத்திற்கு ரூ.2 ஆயிரம் கோடி, திட்ட வடிவமைப்பு நிதியத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக காவல்துறைக்கு இந்தாண்டு ரூ.6 ஆயிரத்து 99 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தீயணைப்பு துறைக்கு ரூ.277 கோடியும், சிறைத்துறைக்கு ரூ.281 கோடியும், நீதித்துறைக்கு ரூ.985 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பேரிடர் நிவாரண நிதியத்திற்கு ரூ.717 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று ஓ.பன்னீர் செல்வம் வாசித்தார். –
மேலும் பட்ஜெட்டில் இடம் பெற்ற அமசங்கள் இதோ:

* காவல்துறைக்கு ரூ.6099 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
* தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூ.32.74 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
* மாநில பேரிடர் நிதியத்துக்கு ரூ.713 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
* தீயணைப்பு துறைக்கு ரூ.227 கோடி நிதி ஒதுக்கீடு.
* சிறைச்சாலை துறைக்கு ரூ.281 கோடி நிதி ஒதுக்கீடு.
* வேளாண்துறைக்கு ரூ.6938.57 கோடி நிதி ஒதுக்கீடு.
* நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.8,486.26 கோடி ஒதுக்கீடு.
* மின்சாரதுறைக்கு ரூ.13,819.03 கோடி நிதி ஒதுக்கீடு.
* போக்குவரத்துத் துறைக்கு ரூ.1590 கோடி நிதி ஒதுக்கீடு.
* குறு, சிறு, நடுத்தர தொழில்துறைக்கு ரூ.348 கோடி நிதி ஒதுக்கீடு.
* அனைவருக்கும் கல்வி திட்டத்துக்காக ரூ.2329.15 கோடி நிதி ஒதுக்கீடு.
* சுகாதாரத்துறைக்கு ரூ.9350.66 கோடி நிதி ஒதுக்கீடு.
* விளையாட்டுத் துறைக்கு ரூ.142.88 கோடி நிதி ஒதுக்கீடு.
* ஆதிதிராவிடர் நலனுக்கு ரூ.2702 கோடி நிதி ஒதுக்கீடு
* உணவு மானியத்துக்கு ரூ.5500 கோடி நிதி ஒதுக்கீடு.
* அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் நலனுக்காக ரூ.19,841 கோடி
* மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு ரூ.391.93 கோடி நிதி ஒதுக்கீடு
* சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைக்கு ரூ.677.93 கோடி நிதி ஒதுக்கீடு.
* சாலை திட்டங்களுக்கு ரூ.2013 கோடி நிதி ஒதுக்கீடு
* தொழிலாளர் நலத்துறைக்கு ரூ.152 கோடி நிதி ஒதுக்கீடு.
* பள்ளி கல்வித்துறைக்கு ரூ.24,820 கோடி நிதி ஒதுக்கீடு. கடந்த 5 ஆண்டுகளில் பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.86,193 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்துக்கு ரூ.688 கோடி நிதி ஒதுக்கீடு.
* உயர்கல்வித்துறைக்கு ரூ.3,821 கோடி நிதி ஒதுக்கீடு.
* சுற்றுலாத்துறை ரூ.84.66 கோடி நிதி ஒதுக்கீடு.
* மீனவர் நலனுக்காக ரூ.742 கோடி நிதி ஒதுக்கீடு.


