32°C
விளம்பரம்

தப்புக் கணக்கு போடக் கூடாது!

admin Published: October 15, 2013 2 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க / Listen to News



உலகின் எந்தப் பகுதியில் எது நடந்தாலும், உடனுக்குடன் அதை விரிவாகத் தெரிந்துகொள்ளும் யுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்; கடந்த 5 ஆண்டுகளாக “சமூக வலை தளங்களின்’ உதவியால் எல்லோருமே தகவல் தொடர்புகளை வளர்த்துக்கொண்டு வருகிறார்கள். எல்லோரிடமும் “கைப்பேசி’ என்று அழைக்கப்படும் “செல்போன்’ இருப்பதைப் போல, பெரும்பாலான நடுத்தரவர்க்க வீடுகளில் “இணையதள இணைப்புடன் கூடிய கணினி’ப் பயன்பாடு அதிகரித்துவிட்டது. எனவே எந்த ஒரு பொது விஷயம் குறித்தும் தங்களுடைய கருத்து என்ன என்பதை எளிதில் தெரிவிக்க எல்லோருக்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறது. இதனால் நம்முடைய வாழ்க்கைமுறை எப்படி மாறிவிட்டது என்று நிபுணர் யாராவது ஆராய்ந்து தெரிவித்தால் சுவையாகவே இருக்கும்.
15 - edit human tec
சமூக வலைதளங்களின் பரப்பு, செல்வாக்கு ஆகியவற்றை ஒப்புக்கொள்ளும் அதே வேளையில் அதன் சக்தி, தரம் குறித்து நாம் சிந்தித்தே ஆக வேண்டும். இன்றைய இளைய சமுதாயம் குனிந்த தலை நிமிராமல் தங்களுடைய செல்போன்களையோ, “டேப்லட்’ என்று அழைக்கப்படும் கையடக்கக் கணினிகளையோ, மடி கணினிகளையோ (லேப்-டாப்) பயன்படுத்துவதிலேயே மூழ்கியிருக்கிறார்கள்.

நாம் நம்முடைய செய்தி சேனல்களை அடிக்கடி விமர்சனம் செய்கிறோம். ஏதாவது ஒரு பிரச்னையைத் தொடுவது, அதை ஊதிப் பெரிதாக்குவது, மூன்று அல்லது நான்கு நாள்களுக்கு சலிக்கும் விதத்தில் அதையே பேசிக்கொண்டிருப்பது, பிறகு அதைவிட்டுவிட்டு வேறொன்றுக்குத் தாவிவிடுவது என்பதே அவற்றின் வாடிக்கையாக இருக்கிறது. உடனடி செய்திகள், “பிளாஷ் நியூஸ்’ என்றெல்லாம் தந்து அதில் திருப்தி அடையாமல் இப்போது நம்மை பாதிக்கும் அன்றாடப் பிரச்னைகள் குறித்து நான்கு பேரைவிட்டு விவாதித்து, அரசு நிர்வாகம் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லவும் ஆரம்பித்துவிட்டார்கள்.

தகவல் தொழில் நுட்ப வேகத்துக்கு இணையாக அரசு நிர்வாகத்தை நடத்த முடியாது. செல்போன் பயன்பாடும் கணினிப் பயன்பாடும் அதிகரிப்பதாலேயே நாடு முன்னேறிவிட்டதாக தவறாக நினைத்துக்கொள்ளக்கூடாது என்பதை ஒவ்வொருவரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

அருண் நேரு.

உடனடி செய்திகள்