தமிழ் குரல் / AI Voice
சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எல். தீவிரவாத இயக்கம் அவ்வபோது ராணுவத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஐ.எஸ்.ஐ.எல். இஸ்லாமிக் தீவிரவாத இயக்கத்திற்கு அல்-கொய்தா தீவிரவாத இயக்கம் ஆதரவு அளித்து தாக்குதலுக்கு உடந்தையாக உள்ளது என்று கூறப்பட்ட நிலையில் .ந்த இயக்கத்தில் இருந்து சமீபத்தில் வெளியேற்றப்பட்ட வாலிபர் ஒருவரது கை வெட்டப்பட்டுள்ளது. அது நேரடி ஒளிபரப்பாக டுவிட்டரில் வெளியிட்டுள்ளனர். அந்த காட்சியின் புகைப்படங்கள் டுவிட்டர் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

வாலிபர் மீது திருட்டு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சுற்றி தீவிரவாதிகள் சூழ்ந்திருக்க கைகள் கட்டப்பட்ட நிலையில் இருக்கும் வாலிபரின் கைகள் வெட்டப்பட்டுள்ளது. அலிபோ நகருக்கு அருகே உள்ள மாஸ்காநாத் என்ற இடத்தில் இது நடந்துள்ளது என்று தகவல்கள் தெரிவித்துள்ளன.
பயங்கரமான இந்த புகைப்படங்களை உடனடியாக டுவிட்டரில் இருந்து நீக்க வேண்டும் என்று அந்நிறுவனத்திற்கு பல்வேறு தரப்பு கோரிக்கைகள் சென்றுள்ளது. பின்னர் டூவிட்டர் அக்கவுண்ட் கண்டுபிடிக்கப்பட்டு வாலிபர் கையை வெட்டிய புகைப்படங்கள் மற்றும் அது குறித்தான தகவல்கள் நீக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்நாட்டு மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Man’s hand cut off in Syria in horrific act of violence, photos posted on Twitter
***********************************************************************************************
While more than two million people have already fled to the neighbouring countries, vile acts of terror are still taking place.In one appalling act, a pro-Al Qaeda Jihadist group in Syria posted photos of a man having his hand cut off on Twitter.
