டீன் ஏஜ் பருவத்தில் வரும் மனஅழுத்தத்தால் அதிகரிக்கும் தற்கொலை!-ஐ. நா. கவலை!

டீன் ஏஜ் பருவத்தில் வரும் மனஅழுத்தத்தால் அதிகரிக்கும் தற்கொலை!-ஐ. நா. கவலை!

டீன் ஏஜ் என்பது கனவுகள் மலரும் பருவம்.பெற்றோருக்கோ சிம்ம சொப்பனமான காலம்.டீன் ஏஜ் சுதந்திரத்தை நாடும் பருவம்.அதே சமயம் எதிர் காலம் பற்றிய உறுதியான நம்பிக்கை தோன்றாத பருவம்.இப்பருவத்தில் எதிர்காலத்தைப் பற்றி பயமுறுத்தும் விதமாகப் பேசினால் அவர்களுக்கு எதிர் மறையான சிந்தனைகள்தான் வளரும்.இதற்கிடையில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், உலக அளவில் பருவ வயதை அடைந்த டீன் ஏஜினர் மனஅழுத்தத்தால் வியாதிக்கு உட்படுவதும் மற்றும் செயல்பாடுகளில் குறைவு ஏற்பட்டு, தற்கொலை செய்து கொள்பவர்கள் அல்லது மரணம் அடைவதில் 3வது இடம் வகிக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளது.
teen suicide 1
நேற்று வரை நீங்கள் சொன்னதற்கெல்லாம் தலையசைத்துக் கொண்டு, உங்களையே சுற்றிச் சுற்றி வந்த உங்கள் பிள்ளை, இன்று எதிர்த்துப் பேசுவது உங்களைக் காயப்படுத்தலாம்… வருத்தத்தில் ஆழ்த்தலாம். முன்பெல்லாம் நீங்கள் சொல்வதற்குக் கீழ்படிந்த உங்கள் பிள்ளை, இன்று நீங்கள் என்ன சொன்னாலும் அதற்கு ஏட்டிக்குப் போட்டியாக எதிர்பேச்சு பேசுவதும், விவாதம் செய்வதும் உங்களுக்குப் புதிதாகவும் புதிராகவும் தோன்றும்.இதற்கிடையில்தான் உலக சுகாதார அமைப்பு நடத்திய சில ஆய்வுகளின்படி, மக்களில் பாதிபேர் மனநலம் பாதிப்பிற்கு உள்ளாவது அவர்களது 14வது வயதில் தொடங்குகிறது என்றும் எனவே, அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு கிடைத்தால் அது மரணத்தை தவிர்ப்பதுடன் வாழ்க்கை முழுவதும் பாதிப்பிற்கு உள்ளாவதை தடுத்திடவும் முடியும் என்றும் தெரிவிக்கிறது.

அதிலும் இந்த ஆய்வு, புகையிலை, மதுபானம் மற்றும் போதை பொருள் பயன்பாடு, எச்.ஐ.வி., காயங்கள், மனநலம், ஊட்டச்சத்து, இனப்பெருக்கத்தில் சுகாதாரம் மற்றும் வன்முறை ஆகிய பல்வேறு விவகாரங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டு உள்ளது. மனஅழுத்தத்திற்கு முந்தைய நிலையில் அதாவது 2வது இடத்தில் வருவது போக்குவரத்தின்போது ஏற்படும் காயங்கள்.
இந்த ஹெவி டிராபிக்கால் இளம்பெண்களை விட இளைஞர்கள் 3 மடங்கு அதிகமாக பலியாகின்றனராம்.

அதாவது கடந்த 2012ம் ஆண்டில் உலக அளவில் 10.3 லட்சம் இளைஞர்கள் பலியாகியுள்ளனர். உலக அளவில் பலியாவோரில் முதல் மூன்று காரணங்கள் சாலை போக்குவரத்தில் ஏற்படும் காயங்கள், எச்.ஐ.வி./எய்ட்ஸ் மற்றும் தற்கொலை ஆகியவற்றால் ஆகும். உலக அளவில் இளைஞர்கள் மரணம் அடைவதற்கு காரணமாக 2வது இடத்தில் உள்ள எச்.ஐ.வி. நோய் தாக்கம் உலக அளவில் அதிகரித்து வருகிறது.எனவே, எச்.ஐ.வி. உட்பட இளைஞர்களின் இனப்பெருக்க சுகாதாரத்தை பாதுகாப்பது மற்றும் ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை நாம் விட்டு விட கூடாது என்று அந்த அமைப்பின் விஞ்ஞானியும், அறிக்கையின் தலைமை எழுத்தாளருமான ஜேன் பெர்குசன் தெரிவித்துள்ளார்.

மேலும் இளம்பெண்களில் தற்கொலைக்கு அடுத்து மிக பெரிய உயிர் கொல்லியாக இருப்பது குழந்தை பிறக்கும்போது ஏற்படும் சிக்கல்கள்தான். அத்துடன் 10 முதல் 14 வயது கொண்டவர்களில் பொதுவாக காணப்படும் டயோரியா எனப்படும் வயிற்று போக்கு மற்றும் மூச்சு பாதையில் ஏற்படும் பாதிப்புகள் ஆகியவை 2வது மற்றும் 4வது நிலையில் மரணத்தை உருவாக்கும் காரணங்களாக உள்ளன. இந்த வயதில் மரணம் அடைவோரில் 18 சதவீதம் பேர் மூளை சவ்வில் ஏற்படும் காய்ச்சல் (மெனிங்கிடிஸ்) பாதிப்பிற்கு உள்ளாகின்றனர் என்றும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.