ஜெயலலிதாவைச சந்தித்த தே.மு.தி.க., பா.ம.க. எல்.எல்.ஏ.க்கள்!

ஜெயலலிதாவைச சந்தித்த  தே.மு.தி.க., பா.ம.க. எல்.எல்.ஏ.க்கள்!

முதலமைச்சர் ஜெயலலிதாவை இன்று திருத்தணி தொகுதி தே.மு.தி.க. எம்.எல்.ஏ அருண் சுப்பிரமணியம் மற்றும் அணைக்கட்டு தொகுதி பா.ம.க. எம்.எல்.ஏ. கலையரசன் ஆகியோர் சந்தித்து பேசினர்.இந்த சந்திப்பின்போது, தங்களது தொகுதியின் வளர்ச்சிக்கு உதவுமாறு முதல்வர் ஜெயலலிதாவிடம், இரு எம்.எல்.ஏ.க்களும் கோரிக்கை விடுத்ததாக தகவல்கள் வந்ததையடுத்து மேற்படி இரு கட்சியிலும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
jaya & mla's
கடந்த ஆண்டில் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள், திட்டக்குடி தமிழழகன், ராதாபுரம் மைக்கேல் ராயப்பன், விருதுநகர் மா.பா.பாண்டியராஜன், சேந்தமங்கலம் சாந்தி ராஜ மாணிக்கம், மத்திய மதுரை சுந்தரராஜன், பேராவூரணி அருண்பாண்டியன், செங்கம் சுரேஷ்குமார் ஆகிய 7 பேரும் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தனர். இதன்பிறகு இவர்கள் ஏழ்வருரும் தே.மு.தி.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களாக செயல்பட்டு வருகின்றனர்.இந்நிலையில், சமீபத்தில் தே.மு.தி.க. அவைத் தலைரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமாக பொறுப்பு வகித்து வந்த பண்ருட்டி ராமச்சந்திரன் அக்கட்சியில் இருந்து சமீபத்தில் விலகினார். இதையடுத்து, அவர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார். இதன்மூலம் 29 எம்.எல்.ஏ.க்களை கொண்ட தே.மு.தி.க.வின் பலம் 21 ஆக குறைந்தது.இந்நிலையில் அருண் சுப்பிரமணியமும் இன்று ஜெயலலிதாவை சந்தித்திருப்பதன் மூலம் தே.மு.தி.க.வின் பலம் சட்டசபையில் 20 ஆக குறைந்துள்ளது.

இப்படி ஜெயலலிதாவை சந்தித்த தே.மு.தி.க.அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 8 பேரும் அதிகாரப்பூர்வமாக கட்சி தாவினால் கட்சி தாவல் சட்டத்தின் கீழ் எம் எல் ஏ பதவியையே இழக்க நேரிடும். இதன் காரணமாகதான் கட்சி தாவாமல். சட்டசபை மற்றும், சட்டசபைக்கு வெளியிலும் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகின்றனர்.அதே சமயம் இவர்களை விஜயகாந்த் கட்சியைவிட்டு நீக்கினால் அவரது எதிர்க்கட்சி தலைவர் பதவி பறிபோய்விடும் என்பதால், அவரும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் உள்ளார். எனினும் தே.மு.தி.க. எம்.எல். ஏ.க்களில் பாதிபேர் கட்சித் தாவினால், அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டம் பாயாது. அவர்கள் தனி அணியாக செயல்பட முடியும்.அத்துடன் விஜயகாந்த் அனுபவித்து வரும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் இழக்க நேரிடும் என்றாலும் அதற்கு இன்னும் ஆறு தே மு தி க எம்.எல் ஏ-களை இழுக்க போராடி வருகிறார்கள்.அது போல பா ம க விலும் குழப்பம் நிலவுகிறது

Related Posts