’ஜெமினி’ ஸ்டூடியோ வாசன்- கொஞ்சூண்டு பிளாஷ்பேக்! By சிவகுமார்

’ஜெமினி’ ஸ்டூடியோ வாசன்- கொஞ்சூண்டு பிளாஷ்பேக்! By சிவகுமார்

ஜெமினி எஸ்.எஸ்.வாசன் அவர்கள் தஞ்சையில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து விதவைத் தாயால் வளர்க்கப் பட்டவர். வீட்டில் இட்லி சுட்டு, தெருவில் விற்று, தாயார் குழந்தையை படிக்க வைத்தார். மூன்று இட்லி, குழந்தைக்குப் போதவில்லை..கூடையில் விற்க வைத்திருந்த இட்லி யிலிந்து ஒன்றை எடுத்துச் சாப்பிட்டு வளர்ந்தது.


வாலிப வயதில் திருச்சியிலிருந்து 200 மைல் சைக்கிள் சவாரி செய்து சென்னை வந்தார். தானே சிறுகதை எழுதி துண்டு பிரசுரமாக அச்சிட்டு ஓடும் ரயிலில் அவரே விநியோகம் செய்தார்.தமிழ் சினிமாவின் முன்னோடி கே.சுப்ரமணியம் அவர்களிடமிருந்து 86,467 ரூ 9 அணா 11 பைசாவுக்கு ஜெமினி ஸ்டுடியோவை வாங்கினார். 1940-லிருந்து தமிழ், தெலுங்கு, இந்தி படங்கள் தயாரித்தார்.

1948 -ல் ‘சந்திரலேகா’- படத்தை அன்றே 30 லட்சம் செலவில் (இன்று 100 கோடிக்கு மேல் ) தயாரித்து அந்தப் படத்திற்கு சுமார் 700 பிரதிகள் எடுத்து இந்தியா முழுக்க ரிலீஸ் செய்து இந்தியாவின் ‘ செசில் பி டெமில்லி ‘ என்று பெயர் எடுத்தார்.

1953 -ல் ‘ஒளவையார்’ -படத்தை – 6 ஆண்டுகள் தயாரித்து மீண்டும் சரித்திரம் படைத்தார். ஔவையாக நடித்த கே. பி. சுந்தராம்பாள் அம்மையாருக்கு 4 லட்சம் சம்பளம் கொடுத்தார்.ஆனந்த விகடன் பத்திரிக்கையின் நிறுவனரும் அவரே. அந்த மாமனிதர் இயக்கத்தில் 1966-ல் காஞ்சனாவின் கணவராக, சிவாஜியின் மருமகனாக ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’ -படத்தில் 1500 ரூ சம்பளத்தில் நடித்ததை பாக்கியமாக நினைக்கிறேன்

நடிகர் சிவகுமார் https://www.facebook.com/ActorSivakumar?fref=photo

error: Content is protected !!