ஜாட் இனத்தவரின் போராட்டத்தால் தாகத்தில் திணறுகிறது தலைநகர் டெல்லி
அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் ஆகிய வட மாநிலங்களில் ஜாட் இன மக்கள் பெருவாரியாக வாழ்கின்றனர். பாஜக ஆட்சி நடைபெறும் அரியானாவில் வாழ்ந்து வரும் ஜாட் இன மக்கள், இடஒதுக்கீடு கேட்டு கடந்த சில நாட்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் காரணமாக ஹரியா ணாவின் முனாக் நீர்நிலையிலிருந்து டெல்லிக்கு தண்ணீர் வர முடியாததால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் டெல்லிவாசிகளுக்கு போதுமான தண்ணீர் வருவதை மத்திய அரசு உத்தரவாதம் செய்யக் கோரி டெல்லி அரசு சுப்ரீம் கோர்ட்டை நேற்று நாடியது.

அனைத்து நீர்சுத்திகரிப்பு நிலையங்களும் மூடப்பட்டுள்ளன, ஹரியாணாவிலிருந்து இன்று தண்ணீர் திறந்து விட் டால் கூட தட்டுப்பாட்டைப் போக்க 24 மணி நேரம் ஆகும் என்று தெரிகிறது. இந்நிலையில் ஜாட் போராட்டத் தினால் ஹரியாணா மாநிலம் ஸ்தம்பித்துப் போயுள்ளது. முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டன. பாதுகாப்புப் படையினர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
இதனிடையே போராட்டத்தை கைவிட்டு அமைதி பாதைக்கு திரும்புமாறு போராட்டக்காரர்களுக்கு சேவாக் உள் ளிட்ட பலரும் லோரிக்கை விட்டார்கள். ஆனால் வெற்று வாக்குறுதிகளால் இனியும் ஏமாறப்போவதில்லை என்று கூறியுள்ள போராட்டக்காரர்கள், தங்கள் கோரிக்கை தொடர்பாக எழுத்துப்பூர்வமான உறுதி அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என அறிவித்து உள்ளனர்.இதற்கிடையே ஜாட் இனத்தவரின் போராட்டம் நேற்று டெல்லி வரை பரவியதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் டெல்லியில் நிலவும் கடும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை விடப்படுவதாக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.


