ஜம்போ 3 டி திரைப்பட தொடக்க விழா ஆல்பம்
தமிழ் திரை பட உலகில் 3D முறையில் வெளி வரும் படங்களுக்கு சமீப கால முன்னோடியாக இருந்தது ‘ அம்புலி’ திரைப்படமாகும்.அந்த படத்தை இயக்கிய இரட்டை இயக்குனர்கள் ஹரி -ஹரிஷ் தங்களது அடுத்த படமான ‘ஆ’ படத்தின் வெளியீட்டுபணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வரும் அதே வேளையில் தங்களது மற்றொரு படமான ‘ஜம்போ 3D’ படத்தின் துவக்கத்தை திரைஉலக பிரபலங்கள் சூழ கொண்டாடினர். சங்கர் brothers மற்றும் எம் எஸ் ஜி மூவீஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படம்இந்திய -ஜப்பான் ஆகிய இரு நாடுகளின் கூட்டு தயாரிப்பில் உருவாகும் படமாகும். தொண்ணூறு சதவீதம் ஜப்பான் நாட்டில் படமாக்கபட உள்ள ‘ஜம்போ 3 D’ படத்தின் தயாரிப்பாளர் ஜி.ஹரி கூறுகையில்’ தமிழ் நாட்டு மக்களின் கலாசாரத்தின் பின்னணியை ஜப்பானியமக்கள் திரை படங்கள் மூலம் பெரிதளவுக்கு அறிந்து வைத்து உள்ளனர்.தமிழ் படங்களுக்கு அங்கே பிரத்தியேகமாக ஒரு மார்க்கெட்உருவாக்க வேண்டும் என்பதே டோக்யோ தமிழ் சங்கத்தின் தலைவர் என்ற வகையில் என்னுடைய கனவும் லட்சியமும் கூட’என்கிறார்.இதில் .மானாட மயிலாட தொலை காட்சிநிகழ்ச்சி மற்றும் ‘அம்புலி’ ‘ஆ’ ஆகிய திரைப்படங்களில் நாயகனாக நடித்த கோகுல் நாயகனாக நடிக்க அவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் பேபி ஹம்சிகாஹரி.
































