சென்னையில் ஓலா- win படகு ஃப்ரீ சவாரி

சென்னையில் ஓலா- win படகு ஃப்ரீ சவாரி

கடந்த நவம்பர் 14, 15 பெய்த கன மழையால் சென்னை புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. குறிப்பாக கிண்டி தாண்டிய புறநகர் பகுதியில் விடு கட்டியவர்களும் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருப்பவர்களும் இரண்டு நாட் களாக தனிமைத் தீவில் மாட்டிக் கொண்டவர்கள் போல அவஸ்தைப்பட்ட்ய் வருகிறார்கள். பல இடங்களில் 10 அடி உயரத்துக்கு வெள்ளம் தேங்கியுள்ளது. தரைத்தளத்தில் உள்ளவர்கள் முதல் மாடிகளில் தஞ்சம் அடைந்துள் ளனர்.இவர்களுக்கு உணவு வழங்குவது, மீட்பது ஆகியவை நடந்து வருகிறது. மத்திய அரசின் ஹெலிகாப்டர் விமானங்கள், படகுகள்,, அரசின் டிராக்டர்கள் மூலம் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.இதனிடையே சென்னையின் பிரபலமான டாக்ஸி நிறுவனமாக திகழும் ஓலா, தற்போது சென்னை மக்களை “ஓ……”ஹோ என்று ஆச்சரியப்பட வைத்துள்ளது. ஆம், சென்னையில் ஓலா நிறுவனம் படகு சவாரியை துவக்கியுள்ளது. இந்த சவாரிக்கு கட்டணம் ஏதுமில்லை என்பது இன்னொரு ஆச்சரியம்.
ola boat nov 17
தற்போது தண்ணீரில் தத்தளிக்கும் சென்னை மக்களுக்காக, ஓலா நிறுவனம் படகு சவாரியை துவக்கியுள்ள ஓலா நிறுவனம், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிக் குழுக்கள் கொடுக்கும் தகவலின் அடிப்படையில் தண்ணீர் தேங்கிய, மக்கள் சிக்கிக் கொண்ட பகுதிகளுக்கு படகுகள் மூலம் சென்று மக்களை மீட்டு வருகிறதாம்.இந்த படகுகளை, நன்கு பயிற்சி பெற்றவர்களும், மீனவர்களும் இயக்குவதாகவும், இதில் மீட்கப்படுபவர்களுக்கு எந்த விதமான கட்டணமும் இன்றி சாப்பாடும், குடிநீரும் வழங்கப்பட்டு வருவதாகவும், அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு படகில் இரண்டு படகோட்டிகள் இருப்பார்கள். தேவையான குடைகள் இருக்கும். இதில் 5 முதல் 9 பேர் வரை பயணம் செய்யலாம்.இந்த படகுகள் அடுத்த 3 நாட்களுக்கு இயக்கப்படும் என்றும், மேலும் தண்ணீர் தேங்கியிருந்தால் சேவை நீட்டிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts