சூரிய நமஸ்காரம் செய்வது எப்படி தெரியுமா?

சூரிய நமஸ்காரம் செய்வது எப்படி தெரியுமா?

சூரிய நமஸ்காரம் செய்வது எப்படி – இன்று சன்டே – ஞாயிற்று கிழமை – சூரியனுக்கு உகந்த நாள். – பெரியவர்கள் கூறுவார்கள் – கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்யக்கூடாது என்றூ – அதன் அர்த்தம் என்ன?

ஒரு மனிதனுக்கு தூக்கம் முதல் இதய நோயான ஹார்ட் அட்டாக் வரை வராமல் இருக்க நீங்கள் செய்ய வேண்டிய ஒரே விஷயம் சூரிய நமஸ்காரம். அதிகாலை இளவெயில் அதாவது சூரியன் உதித்த 60 நிமிடங்களுக்குள் இதை செய்தால் உங்களுக்கு அத்தனை நன்மை பயக்கும். சிலர் இது ஹிந்துக்களின் வழிபாடாக கூறுவார்கள் உண்மை அதுவல்ல இது ஒரு அறிவியலின் வெளிப்பாடே………………….அதனால் எல்லா மதத்துக்காரர்களும் செய்யலாம். 12 மணி நேரம் சூரியன் இருக்கும் என்பதால் சூரிய நமஸ்காரம் 12 வகைகளை உள்ளடக்கியது. அதன் தொகுப்பு உங்களுக்கு இங்கே.
ravi- sooriya namaskaar
1. மூச்சு விடுதல் – நேராக நில்லுங்கள், கையை கும்பிடுவது போல் நெஞ்சுக்கு நேராக குவித்து கொண்டு உடம்பின் எடையை ஒரு சேர சமமாக வைத்துக்கொண்டு மூச்சை விடுங்கள் சீராக.

2. மூச்சு இழுத்தல் – கைகளை தூக்குங்கள் பின்பு இடுப்பை முன் புறம் தள்ளி கைகளை வில் போன்று பின்னோக்கி வளையுங்கள் ஆனால் கால்கள் மட்டும் நேராக இருக்க வேண்டும்.

3. வெளியே இழுத்தல் – கைகளை ஒன்றாக்கி கீழ் நோக்கி குனிந்து கால் விரல்களை தொடுங்கள் முட்டி நேராக இருந்தால் நல்லது அல்லது முட்டியை லேசாக பென்டாக ஆக்கி கொள்ளலாம்.

4. மூச்சு இழுத்தல் – இடது அல்லது வலது காலை பின்னோக்கி இழுத்து இன்னொரு காலின் முட்டியை தரையில் பதியுங்கள், வில்லை போல் உடலை வளைத்து தலையை மேல் நோக்கி பார்க்கவும், தாவாகட்டை மேல் நோக்கி இருத்தல் அவசியம்.

5. மூச்சை அடக்குதல் – இரண்டு காலையும் ஒரு சேர வைத்து பின்பு மெதுவாக ஒரு பாலம் போல் உடம்பை முன் பக்கம் வளைத்து தரையில் கையை ஊணுங்கள்.

6. மூச்சு விடுதல் – தரையில் கவிழ்ந்து படுத்து உங்கள் நெஞ்சு, தலை தரையில் படும்படி செய்து பின்பு உங்கள் இடுப்பை மற்றூம் கரன்டை கால்களை மேல் நோக்கி தூக்கவும்.

7. மூச்சு இழுத்தல் – கரன்டை கால் தூக்கிய வண்ணம், இடுப்பை தரையில் படும்படி வைத்து இரு தோள்களையும் கீழே வைத்து கையை இந்த மாதிரி வைத்து பின்புறம் மேல் நோக்கி பார்க்கவும்.

8. மூச்சை விடுதல் – இரு கால்களையும் ஒன்றாக வைத்து, இடுப்பைமேல் நோக்கி வ்ளைத்து “வி” திருப்பிய மாதிரி தோள்களை மேல் நோக்கி வைத்து இரு கைகளையும் தரையில் அழுத்தவும், தலையை கீழ் நோக்கி வைக்கவும்.

9. மூச்சை இழுத்தல் – இடது அல்லது வலது காலை பின்னோக்கி இழுத்து இன்னொரு காலின் முட்டியை தரையில் பதியுங்கள், வில்லை போல் உடலை வளைத்து தலையை மேல் நோக்கி பார்க்கவும், தாவாகட்டை மேல் நோக்கி இருத்தல் அவசியம்.

10. வெளியே இழுத்தல் – கைகளை ஒன்றாக்கி கீழ் நோக்கி குனிந்து கால் விரல்களை தொடுங்கள் முட்டி நேராக இருந்தால் நல்லது அல்லது முட்டியை லேசாக பென்டாக ஆக்கி கொள்ளலாம்.

11. மூச்சு இழுத்தல் – கைகளை தூக்குங்கள் பின்பு இடுப்பை முன் புறம் தள்ளி கைகளை வில் போன்று பின்னோக்கி வளையுங்கள் ஆனால் கால்கள் மட்டும் நேராக இருக்க வேண்டும்.

12. மூச்சு விடுதல் – நேராக நில்லுங்கள், கையை கும்பிடுவது போல் நெஞ்சுக்கு நேராக குவித்து கொண்டு உடம்பின் எடையை ஒரு சேர சமமாக வைத்துக்கொண்டு மூச்சை விடுங்கள் சீராக.

இதை செய்தால் இதய நோய், வலிப்பு, மூச்சு பிரச்சினை போன்ற பல நோய்கள் வராதென்று பல அறிவியல் விடயங்கள் கூறுகின்றன. அழகான ஞாயிறு உரித்தாகட்டும்.

UN Salutation & Simple Asanas – Proven Science for a healthier life – Religion doesn’t matter

Related Posts