சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 150 பேர் பலி
சீனாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 150 பேர் உயிரிழந்தனர். தெற்கு சீனாவின் யுனான் மாகாணத்தின் ஜாவோடாங் நகரம் அருகே நிலஅதிர்வு ஏற்பட்டது. கியாவோஜியா என்ற கிராமத்தில் மாலை 4 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தெற்கு சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டர்கருவியில் 6.5ஆக பதிவாகியுள்ளது. பூமியின் 10கி.மீ ஆழத்தில் மையம் கொண்ட நிலஅதிர்வில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தது.

சீனாவின் தென்மேற்கு பகுதியான யுவான் மாகாணத்தில் இன்று மாலை 4.30 மணியளவில் (08.30-ஜி.எம்.டி) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் 150 பேர் பலியாகியிருப்பதாக முதற்கட்ட தகவல் வந்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள வீடுகள் பள்ளிகள் உள்ளிட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. அங்குள்ள ஊடகமான சி.சி.டி.வி. கடந்த 14 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகக்பெரிய


