காமன்வெல்த் போட்டி நிறைவு: பதக்கப்பட்டியலில் இந்தியாவுக்கு 5–வது இடம்

காமன்வெல்த் போட்டி நிறைவு: பதக்கப்பட்டியலில் இந்தியாவுக்கு 5–வது இடம்

காமன்வெல்த் விளையாட்டு போட்டி நேற்று கலைநிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது. 28 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கப்பட்டியலில் இங்கிலாந்து முதலிடத்தை தட்டிச்சென்றுள்ளது.அதே சமயம் இந்திய அணி 15 தங்கம், 30 வெள்ளி மற்றும் 19 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 64 பதக்கங்களை வென்று 5வது இடம் பிடித்தது.சபாஷ்!
glasgow-commonwealth-game-2014-
20–வது காமன்வெல்த் விளையாட்டி போட்டி கடந்த மாதம் 23–ந்தேதி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் தொடங்கியது. இங்கிலாந்தின் காலனி நாடுகளை ஒருங்கிணைக்கும் வகையில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த விளையாட்டு திருவிழாவில் 71 நாடுகளை சேர்ந்த ஏறக்குறைய 4,900 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். 17 வகையான விளையாட்டுகளில் 261 தங்கப்பதக்கத்திற்கு பந்தயங்கள் நடந்தன.12 நாட்கள் ரசிகர்களை குதூகலப்படுத்திய இந்த விளையாட்டு கொண்டாட்டம் நேற்றிரவு கோலாகலமான கலை நிகழ்ச்சிகள் மற்றும் வண்ணமயமான வாணவேடிக்கையுடன் ஹம்ப்டன் ஸ்டேடியத்தில் முடிவடைந்தது. பதக்கப் பட்டியலில் மொத்தம் 37 நாடுகள் இடம் பிடித்துள்ளன

கடந்த 2010ம் ஆண்டு டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டியில் 38 தங்கம், 27 வெள்ளி, 36 வெண்கலம் என மொத்தம் 101 பதக்கங்களுடன் 2வது இடம் பிடித்த இந்தியா, தற்போது 5வது இடத்துடன் திருப்தி அடைந்துள்ளது. அதாவது 215 பேர் கொண்ட குழுவினருடன் இந்த போட்டிக்கு அனுப்பப்பட்ட இந்திய அணி பதக்கப்பட்டியலில் 15 தங்கம் உள்பட 65 பதக்கங்களையும் கைப் பற்றியுள்ளது. அதிகபட்சமாக மல்யுத்தத்தில் 5 தங்கம், 6 வெள்ளி, 2 வெண்கலம் என்று 13 பதக்கங்களும், துப்பாக்கி சுடுதலில் 4 தங்கம், 9 வெள்ளி, 4 வெண்கலம் என்று 17 பதக்கங்களும், பளுதூக்குதலில் 3 தங்கம் உள்பட 14 பதக்கங்களும் கிடைத்தன.இங்கிலாந்து அணி முதல் இடத்தையும், ஆஸ்திரேலியா 2வது இடத்தையும் பிடித்த நிலையில், கனடா அணி 3வதாக வந்துள்ளது. போட்டியை நடத்திய ஸ்காட்லாந்து 4வது இடத்தை பிடித்தது.

இதன் பின 21வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி, ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் 2018ம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி தொடங்கி 15ம் தேதி வரை நடைபெற உள்ளது.

Related Posts