சீனப் பொம்மை + சைக்கிள்களை திரும்பப் பெற்று அழிக்கப் படுகிறது !
சீனாவில் உள்ள விளையாட்டு பொம்மைகள் தயாரிக்கும் 9 நிறுவனங்கள் தாங்கள் தயாரித்த பொருட்களில் சிலவற்றை தர நிர்ணய அமைப்புகளின் உத்தரவையடுத்து பாதுகாப்பு குறைபாடு காரணங்களுக்காக திரும்ப பெற்றுள்ளது. குறிப்பாக குழந்தைகளுக்கான தள்ளுவண்டிகள், மூன்று சக்கர சைக்கிள்கள், பிளாஸ்டிக் கட்டிட பொருட்கள் போன்றவை நிர்வாகத்தின் சோதனைக்கு பிறகு பாதுகாப்பு குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.சக்கரங்கள் மற்றும் பிரேக்குகள் உட்பட பல பாகங்களில் காணப்படும் குறைகள் உள்ள இந்த விளையாட்டு பொருட்களை குழந்தைகள் பயன்படுத்தும்போது ஆபத்து விளைவிக்க கூடும் என்பதால் அவையனைத்தும் அழிக்கப்பட்டன.

சீன பிளாஸ்டிக் விளையாட்டு பொம்மைகள் உலகின் பல்வேறு நாடுகளிலுள்ள சாலையோரங்கள், சிறு கடைகள், பெரும் கடைகள், தள்ளுவண்டி கடைகள், கோவில்களைச் சுற்றியுள்ள கடைகள், கிராமத்து கடைகள் என எங்கும் சர்வ வியாபகம் பெற்றிருக்கின்றன. சீன விநாயகர் பொம்மைகளும் அம்மன் பொம்மைகளும் கோவில்களிலும் வீடுகளிலும் கொலு வீற்றிருக்கின்றன. அதிலும் இந்தியக் குழந்தைப் பருவம் என்பது சீன விளையாட்டு பொம்மைகளால் இன்று தீர்மானிக்கப் படுவதாகிவிட்டது. முன்பு சல்லிசான விலைக்குக் கிடைக்கக்கூடியவை என்பதனால் பிரசித்திபெற்று இந்திய சந்தையைக் கைப்பற்றிய சீன பொம்மைகள் இன்று அவ்வளவு சல்லிசான விலையிலும் கிடைப்பதில்லை. எல்லாவற்றுக்கும் விலை ஏறத்தானே செய்யும்? அத்துடன் இத்தகைய சீன பொம்மைகள் கடையிலிருந்து வீட்டுக்கு வருவதற்குள் உடைந்துவிடக் கூடும்; மேலும் சிறுவர் தொலைக்காட்சி சானல்களில் அமெரிக்க தயாரிப்புகளான பென் 10, ஹக்கி மாரோ, நிஞ்சா ஹட்டோரி, பேட்மேன், ஸ்பைடர் மேன், சூப்பர் மேன், எல்லாமே சீன பொம்மைகளாகவும், சிறுவர் உடைகளாகவும், பள்ளிப்பைகளாகவும் இந்தியக் குழந்தைகள் உலகம் முழுக்க நிறைந்திருக்கின்றன.
இந்நிலையில்தான் சீனாவில் குழந்தைகளுக்காக உற்பத்தி செய்யும் பொம்மை உள்ளிட்ட பொருட்களில் காரீயம் மிகுதியாக பெயிண்ட் பூசுவதால் குழந்தைகள் உடலுக்கு கேடு விளைவதாக புகார் எழுந்தது. இவற்றுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் தடை விதித்தன. இந்நிலையில், சீன நிறுவனங்கள் தயாரித்த பொம்மை 3 சக்கர சைக்கிளில் உள்ள சக்கரம், பிரேக், கைப்பிடி குழந்தைகளுக்கு கேடு விளைவிக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த பொருட்களை தயாரித்த 9 நிறுவனங்கள் அவற்றை திரும்ப பெறுகின்றன. பொருட்களில் தரம் குறைவாக இருந்தால் புகார் அளிக்குமாறு தரக்கட்டுப்பாடு அமைப்பு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
China: Nine firms recall toys over safety concerns
***********************************************************************
Nine Chinese toy producers are recalling some of their products over safety concerns, the General Administration of Quality Supervision, Inspection and Quarantine said.


